சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முரசொலியை விடுகதை பாணியில் தாக்கியிருக்கிறார் ரஜினி.. பாராட்டத்தான் வேண்டும்.. அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியை விமர்சித்ததற்காக நடிகர் ரஜினிகாந்ததை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகுராஜ் பாராட்டி உள்ளார்.

அண்மையில் துக்ளக் வார இதழின் பொன்விழாவில் பேசிய ரஜினிகாந்த், முரசொலியை படிப்பவர்கள் திமுககாரர்கள் என்றும் துக்ளக் இதழை படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் கூறியிருந்தார். இவரது பேச்சு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ரஜினியை விமர்சித்து பலரும் கருத்துக்களை பகிர்ந்தனர். உதயநிதி ஸ்டாலின் நேரடியாகவே ரஜினியை விமர்சித்தார்.

aiadmk praised the actor Rajinikanth for criticizing Murasoli

இந்நிலையில் முரசொலி குறித்து விமர்சனத்திற்காக ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகுராஜ் பாராட்டி உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், "தொண்டர்களிடம் வசூலித்த தொகையால் முரசொலி அறக்கட்டளை தொடங்குவதாக சொல்லிவிட்டு அதனை தங்களது குடும்பத்து தனிச்சொத்தாக்கிக் கொண்டவர்கள்,

அதற்கு ஆசிரியர் கூட அவர்கள் குடும்பத்தின் ஒருவராகத்தான் இருக்க முடியும். மொத்தத்தில் கருணாநிதி குடும்பத்திற்கான காகித காவடியே முரசொலி.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என தலைப்பிட்டுக்கொண்டு, இன்றைய பொய்யை நாளைக்கு உண்மையாக்க தி.மு.க.வால் நடத்தப்படுகிற மூலப்பத்திர முரசொலியை படிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை விடுகதை பாணியில் போட்டுத் தாக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் அதனை பாராட்டத்தான் வேண்டும்.." இவ்வாறு நமது அம்மா நாளேடின் ஆசிரியர் மருது.அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
Maruthu azhauraj, the editor of the ADMK's official daily, praised the actor Rajinikanth for criticizing dmk's Murasoli
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X