சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் பேசாம இருந்திருந்தா இது நடந்திருக்குமா??

திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை பேச்சால் தொகுதியில் தோல்வி ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக-வை ஓரங்கட்டும் அதிமுக | பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்

    சென்னை: ஏதோ கொஞ்சமாச்சும் கிடைச்சிருக்கும். ஆனால் தனது தேவையில்லாத உளறல் பேச்சால் அதையும் கெடுத்து விட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் பக்கத்தில் அதிமுக, பாமகவினர் இப்படித்தான் புலம்பிக் கொண்டுள்ளனராம்.

    திண்டுக்கல் என்ற பெயர் அதிமுகவினருக்கு மிக முக்கியமான ஒன்று. அதிமுகவின் புனிதத் தலம் போலவும் கூட. காரணம், அதிமுக பிறந்ததும் கிடைத்த முதல் வெற்றி திண்டுக்கல்தான். அப்படிப்பட்ட திண்டுக்கல்லை, எப்போதுமே கெளரவப் பிரச்சினையாக கருதுவது அதிமுகவின் வழக்கம்.

    ஆனால் இந்த முறை அதிமுக திண்டுக்கல்லில் 3 விதமாக அவமானப்பட்டுள்ளது. அதுதான் அடிமட்டத் தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளதாம்.

    நாட்டில் சாதியத்தை விட தேசியவாதமே மேலோங்கியுள்ளது.. பாஜ வெற்றி குறித்து ஷாநவாஸ் ஹுசைன் கருத்து நாட்டில் சாதியத்தை விட தேசியவாதமே மேலோங்கியுள்ளது.. பாஜ வெற்றி குறித்து ஷாநவாஸ் ஹுசைன் கருத்து

     கூட்டணிக்கு தொகுதி

    கூட்டணிக்கு தொகுதி

    முதலில் அதிமுக திண்டுக்கல்லில் போட்டியிடவில்லை. கூட்டணிக் கட்சிக்கு இதைக் கொடுத்து விட்டது. இதை அதிமுகவினர் எதிர்பார்க்கவில்லை. என்ன இப்படி பண்ணிட்டாங்களே என்று வேதனைக்குள்ளாகினர் அதிமுகவினர். மாயத்தேவர் வென்று கொடுத்த தொகுதியை இப்படி கூட்டணிக்கு ஒதுக்கிட்டாங்களே என்று அதிர்ச்சி அடைந்தனர்.

     பாமகவுக்குப் போய் ஒதுக்கீடு

    பாமகவுக்குப் போய் ஒதுக்கீடு

    அடுத்த அதிர்ச்சி, தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியது. இதை அதிமுகவினர் மட்டுமல்ல, பாமகவினருமே எதிர்பார்க்கவில்லை. வேட்பாளர் கூட கிடைக்கவில்லை. வேட்பாளர் கிடைத்தால் அவருக்கு நல்ல சட்டை துணி கூட கிடையாது. இப்படி அடுத்த குழப்பம் வந்தது.

     உளறல் சீனிவாசன்

    உளறல் சீனிவாசன்

    அடுத்து வந்த சோதனை அதை விட மோசமானது. அதாவது உள்ளூர் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சுக்கள் வந்த ஓட்டுக்களையும் கூட திசை திருப்பி விட்டது. மாம்பழம் என்று சொல்வதற்கு ஆப்பிள் என்று அவர் சொல்லி அதை காமெடியாக்கி விட்டார். இதெல்லாம் பாமகவுக்கு பாதகமாக வந்து சேர்ந்தது.

     தொண்டர்கள் அப்செட்

    தொண்டர்கள் அப்செட்

    அதிமுகவுக்குத் தொகுதி கிடைக்கவில்லை, பாமகவுக்குப் போனதால் கவலை, திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு என எல்லாம் சேர்ந்து அதிமுகவினரை சோர்வடைய செய்து விட்டது. யாருமே மனசார வேலை பார்க்கவில்லை. இதன் பலனை தற்போது திமுக அறுவடை செய்துள்ளது.

     வாக்கு வித்தியாசம்

    வாக்கு வித்தியாசம்

    ஆம், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த வேட்பாளர் திண்டுக்கல்லில் போட்டியிட்ட வேலுச்சாமிதான். கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் வேலுச்சாமி. இது இந்திய அளவில் 4வது அதிக வாக்கு வித்தியாசமாம்.

    இதற்கு மேலும் திண்டுக்கல்லை அதிமுக கோட்டை என்று யாருமே சொல்ல முடியாது என்று கூறும் அளவுக்கு திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளூர் அதிமுகவினரும் சேர்ந்து கட்சியை காலி செய்து விட்டனர்.

    English summary
    AIADMK's defeat in Dindigul is said to be the reason for Srinivasan's controversial speeches
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X