• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அதிகாரப் போட்டியால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி - ஜெ. உதவியாளர் பூங்குன்றன் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக என்ற தேன்கூட்டில் கல் எறியப்பட்டு நெடுங்காலம் ஆயிற்று. அதிகாரம் என்ற கவசம் இவ்வளவுநாள் தடுத்துக் கொண்டிருந்தது. கவசம் உடைக்கப்பட்டுவிட்டது. தேனீக்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இனி இயல்புநிலைக்கு திரும்புமா? என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே அதிகார போட்டி நிலவுகிறது. இதில் ஜெயிப்பது இபிஎஸ்தான். தற்போது சசிகலாவும் கட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்.

அமமுக, அதிமுக நிர்வாகிகளுடன் செல்போனில் பேசி ஆடியோவை ரிலீஸ் செய்து வருகிறார். சசிகலா உடன் போனில் பேசிய அனைவரையும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இது குறித்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்னப்பா இது.. மரத்தின் உச்சியில் உட்கார்ந்துகிட்டு வேர்களை நீக்கலாமா?.. பழனி தொண்டரிடம் சசிகலா வேதனை என்னப்பா இது.. மரத்தின் உச்சியில் உட்கார்ந்துகிட்டு வேர்களை நீக்கலாமா?.. பழனி தொண்டரிடம் சசிகலா வேதனை

பாதையும் பயணமும்

பாதையும் பயணமும்

மூன்று அணிகளாகி சண்டை போட்டுக் கொள்ளும் உங்களைப் பார்த்து நம்பிக்கை இழந்தவர்கள் நம்பிக்கை தேடி பயணமாகி விட்டனர். பாதையை காட்டி விட்டனர். இனி அந்த பாதையில் பயணிப்பது சுலபம். பலருக்கும் அந்த சிந்தனை மலர ஆரம்பித்துவிட்டது என்பதை நான் உணர்கிறேன்.

இன்றைய தேவை

இன்றைய தேவை

எந்த அணியிலும் விலகியவர்களை திட்டத் துடிக்கும் தொண்டர்களே விழித்துக்கொள்ளுங்கள். திட்டுவதில் நேரத்தை செலவழிப்பதைவிட, எதனால் அவர்கள் விலகினர் என்பதைச் சிந்தியுங்கள். அதுவே இன்றையத் தேவை. வசைபாடியே இருப்பவரையும் இழந்துவிடாதீர்கள்.

ஒற்றுமை இல்லை

ஒற்றுமை இல்லை

சிறுபான்மை சமூகத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைவிட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். பட்டியலின மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இவை உங்களுக்குப் தெரிகிறதா? இல்லை நமெக்கென்ன என்று இருக்கிறீர்களா? பெரும்பான்மை சமுதாயத்திலும் ஒற்றுமை இல்லை.

நம்பிக்கை

நம்பிக்கை

சிறுபான்மை சமுதாயம் ஒருபோதும் பெரும்பான்மை சமுதாயத்தை ரசிக்காது என்பது வரலாறு. இனி ஒவ்வொரு அணியிலும் விலகலை எதிர்பார்க்கலாம். நம்பிக்கை பெற்றவர்கள் விலகுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கையை மற்றவர்களும் விட்டுவிடப் போகிறார்கள். மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை விதைக்காதவரை இவற்றை கட்டுப்படுத்துவது கடினம்.

இளைய தலைவர்

இளைய தலைவர்

ஊர்கூடி தேர் இழுக்கலாம். இல்லை இல்லை நான் ஒருவனே இழுத்துவிடுவேன் என்று நினைப்பது இப்போதைக்கு அறியாமை. ஒற்றுமை இல்லாதவரை உங்களில் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கும். அங்கே இளைய தலைவர் உருவாகிவிட்டார். உங்கள் வயதென்ன என்பதையும் கணக்கிட்டுப் பாருங்கள்.

எதிரியை விமர்சனம்

எதிரியை விமர்சனம்

நம்பிக்கை அங்கே வளர ஆரம்பித்துவிட்டது என்பதை உங்களால் புரிந்துக் கொள்ளமுடிகிறதா? எதிரியை விமர்சனம் செய்வதை விட உங்களுக்குள் விமர்சனம் செய்து கொள்ளுவதுதான் அதிகம். அசிங்கம். நான் சொல்வது உங்கள் நன்மைக்கு என்பதை ஏன் உங்களால் உணர முடியவில்லை. வேதனை!

என்னை வசைபாடுவது

என்னை வசைபாடுவது

நான் சொல்லும் கருத்துக்கள் உங்களுக்கு கசப்பாக இருந்தால் வருந்துகிறேன். கசப்பாக இருக்கும் மருந்துதான் நோயை குணமாக்குகிறது. நான் எதையாவது சொல்லி உங்களை இணைக்கலாம் என்றால் அது முடியாது போல... என்னை வசைபாடுவது, நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் தலைவரை வசைபாடுவதற்குச் சமம் என்பது போகப் போக உங்களுக்குப் புரியும்.

தொண்டர்களை தவிக்கவிடாதீர்கள்

தொண்டர்களை தவிக்கவிடாதீர்கள்

பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்றால் தர்மத்தின் நிலை என்ன? தந்தை விட்டு சென்ற தொழிலை பார்த்துக்கொள்வது சாதனை அல்ல. வளர்ப்பதுதான் சாதனை அல்லது புதிய தொழிலை தொடக்கி நீங்களே வளர்ந்தால்தான் சாதனை. நம் தந்தையும், தாயும் விட்டுச் சென்றதை வளர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அழித்துவிடாதீர்கள். தொண்டர்களை தவிக்கவிடாதீர்கள்

English summary
Jayalalitha assistant Poongundran post his facebook page, There is more to criticizing within yourself than criticizing the enemy. Jayalalithaa's aide Poogunran has said that it is ugly. Why do you not realize that what I am saying is for your benefit? Pain! It's okay if we didn't raise what our father and mother left behind. Do not destroy. Do not overwhelm the volunteers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X