• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கே.சி.வீரமணி வீட்டில் ஸ்டாலின் அரசு சோதனை நடத்துவது ஏன் தெரியுமா? ஓபிஎஸ்-எடப்பாடி காட்டமான அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜோலார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமான, தங்கும் ஹோட்டல்கள், கல்லூரி, மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடக்கிறது.

 வெங்காய விலை உயர போகிறதாம்.. சிக்கலை தரப்போகும் இந்த 2 மாதங்கள்.. ஆய்வில் வந்த பரபரப்பு தகவல் வெங்காய விலை உயர போகிறதாம்.. சிக்கலை தரப்போகும் இந்த 2 மாதங்கள்.. ஆய்வில் வந்த பரபரப்பு தகவல்

தொண்டர்கள் மோதல்

தொண்டர்கள் மோதல்

இதனிடையே, சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோலார்பேட்டையில், காவல்துறையினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சொத்து சேர்ப்பு

சொத்து சேர்ப்பு

2011 முதல் 2021 வரை ஜோலார்பேட்டை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக வீரமணி சொத்து சேர்த்ததாக புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள்

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள்

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம். வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள், வன விலங்குகள் அல்ல. இது நாடு, காடு அல்ல. காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது, பாசிச முறை அது என்றால் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் இந்தக் கூற்றுக்கு முற்றிலும் முரணான வகையில், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளில் விடியா தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

 தேர்தலுக்காக ரெய்டு

தேர்தலுக்காக ரெய்டு

அண்மையில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்ற முடியாமல் மக்களின் வெறுப்பினை சம்பாதித்திருக்கின்ற நிலையில் அதனை மூடி மறைத்து, உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக,
முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டக் கழக செயலாளரும், கழகத்தின் தீவிர செயல் வீரருமான கே.சி. வீரமணி வீட்டிலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தவர்கள் என்று சுமார் 28 இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஸ்டாலின் போலீசார் சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் நடாகம்

உள்ளாட்சி தேர்தல் நடாகம்

இது உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு அவர்கள் இவருவரும் தெரிவித்துள்ளனர்.

English summary
The Anti-Corruption Department is conducting raids at 28 places, including the house of former AIADMK minister KC Veeramani. AIADMK chief coordinator O. Panneerselvam and co-coordinator Edappadi Palaniswami have jointly condemned the move.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X