சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவில் அதிரடி மாற்றம்- ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து- ஐடி விங் 4 மண்டலங்களாகப் பிரிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கட்சி அமைப்பில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிமுகவின் ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்பட்டும் அக்கட்சியின் ஐடி விங் கூண்டோடு மாற்றி அமைக்கப்பட்டும் உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. கொரோனா பரவலை முன்வைத்து சட்டசபை தேர்தல்களை ஒத்தி வைக்கக் கூடும் என யூகங்களாக செய்திகள் பரப்ப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டுகின்றன.

திமுகவுக்கு தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது ஆலோசனையின் அடிப்படையில் திமுகவின் செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டமும் பிரஷாந்த் கிஷோரால் வழங்கப்பட்டது என்றே கூறப்படுகிறது.

டிவி விவாதத்தில் காங். எம்.பி. ஜோதிமணியை இழிவாக விமர்சிப்பதா? காங். தலைவர்கள் கண்டனம்- பாஜக பதில்டிவி விவாதத்தில் காங். எம்.பி. ஜோதிமணியை இழிவாக விமர்சிப்பதா? காங். தலைவர்கள் கண்டனம்- பாஜக பதில்

 ஆலோசகர்கள் வியூகம்

ஆலோசகர்கள் வியூகம்

இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவும் அதிரடி காட்டி வருகிறது. சட்டசபையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் முன்பு இருந்ததைவிட மிகவும் மாறி உள்ளன. இதற்கு காரணமே தேர்தல் வியூக வல்லுநர்களின் ஆலோசனைதான் என கூறப்பட்டு வந்தது. தற்போது அதிமுகவின் உட்கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

 ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து

ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து

அதிமுகவில் அக்கட்சியின் ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து

ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து

அதிமுகவில் அக்கட்சியின் ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐடி விங் நிர்வாகிகள் கலைப்பு

ஐடி விங் நிர்வாகிகள் கலைப்பு

இதேபோல் அதிமுகவின் ஐடி விங்- தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூண்டோடுகள் மாற்றப்பட்டுள்ளனர். அதிமுகவின் ஐடி விங் 4 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மண்டலங்களாக ஐடி விங் பிரிக்கப்பட்டிருக்கிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மதுரை மண்டலத்திலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் கோவை மண்டலத்திலும் இணைக்கப்பட்டுள்ளன.

 ஐடி விங் மண்டல செயலாளர்கள்

ஐடி விங் மண்டல செயலாளர்கள்

அதிமுக ஐடிவிங் சென்னை மண்டல செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் மண்டல செயலாளர் கோவை சத்யன், கோவை மண்டல செயலாளர் ஜி. ராமச்சந்திரன், மதுரை மண்டல செயலாளர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐடிவிங் துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
AIADMK is setting up Four zones for its IT wing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X