சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக வளைக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கிடுகிடு அதிகரிப்பு.. காத்திருக்கும் பூகம்பம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..

    சென்னை: திமுக பிடியில் சிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதால் மிகப் பெரிய அரசியல் பூகம்பம் விரைவில் ஏற்படும் என கூறப்படுகிறது.

    முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்க்கப் போவது இல்லை என்பது திமுக நிலைப்பாடாக இருந்தது. சட்டசபை இடைத்தேர்தல்களில் அத்தனை தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்; எடப்பாடி அரசு தானாக கவிழும் எனவும் 'இலவு' காத்தது திமுக.

    AIADMK Shocks over DMKs Operation against TN Govt

    ஆனால் சட்டசபை இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் முதல்வர் எடப்பாடி. தற்போதைய நிலையில் எடப்பாடி அரசாங்கத்தை திமுக கவிழ்க்க முடியாது என்பது திட்டவட்டம்.

    இஃப்தார்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் தாக்கு! இஃப்தார்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் தாக்கு!

    அதுவும் மத்தியில் பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்திருக்கும் சூழலில் பெரும்பான்மை பெற்றுள்ள எடப்பாடி அரசை எதுவும் செய்ய முடியாது என்பதை திமுக தலைமை உணர்ந்தே இருந்திருந்தது. ஆனால் இடைத்தேர்தல்களில் பணத்தை தண்ணீராக செலவு செய்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், திமுக ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும். தேர்தலில் விட்டதை அள்ளிவிடலாம் என கணக்குப் போடுகின்றனர்.

    இதற்கேற்ற தூபம் போட வேண்டிய இடத்தில் போட்டு எடப்பாடி அரசை கவிழ்க்கும் வேலைகளை ஜரூராக தொடங்கிவிட்டனர். தொடக்கத்தில் 3 அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக வலையில் சிக்கியிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது.

    தமிழகத்தில் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து பதறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தை டெல்லிக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் டெல்லியோ திமுகவின் இந்த வியூகத்தை உடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற அதிருப்தி அதிமுகவில் இருக்கிறது.

    அமைச்சரவையில் இடம்கேட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் மோதிக் கொண்டது பாஜகவை கடுமையாக எரிச்சல் அடைய வைத்திருக்கிறதாம். அந்த கோபத்தை இப்போது டெல்லி காட்டுகிறதாம். இருப்பினும் திமுகவின் இந்த ஆபரேஷனுக்கு எதிராக ஏதோ ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியத்தை டெல்லி கொடுக்கும்; அது அரசியல் பூகம்பமாகவும் இருக்கலாம் என்கிற நம்பிக்கை அதிமுகவில் நிலவுகிறது.

    அவுகளும் 'இலவு' காத்த கிளிகளா?

    English summary
    AIADMK Senior leaders shocked over the DMK's horse trading.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X