சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

15தான் கறார் காட்டும் அதிமுக... 25 கேட்கும் தேமுதிக - இன்றும் பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருமா

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 15 தொகுதிகளைத் தர அதிமுக முடிவு செய்துள்ளது. 25 தொகுதிகளாவது தரவேண்டும் என்று தேமுதிக பட்டியலை கொடுத்துள்ளது. இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவ

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று மாலை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 15 தொகுதிகளைத் தர அதிமுக முடிவு செய்துள்ளது. 25 தொகுதிகளாவது தரவேண்டும் என்று தேமுதிக பட்டியலை கொடுத்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக திமுகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொகுதிப்பங்கீடு நடைபெற்று வருகிறது. திமுகவில் காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி என்றால் அதிமுகவில் தேமுதிகவில் இழுபறி நீடிக்கிறது.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பெரிய கட்சிகளான பாமகவிற்கு 23 தொகுதிகளையும், பாஜகவிற்கு 20 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது அதிமுக. 41 தொகுதிகளைக் கேட்ட தேமுதிக 25 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளது. இரண்டு நாள் நடந்த பேச்சுவார்த்தை இறுதி முடிவு எட்டப்படாமலேயே முடிந்து விட்டன.

புறக்கணித்த தேமுதிக

புறக்கணித்த தேமுதிக

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகதான் அதிகம் பிடிவாதம் பிடிக்கிறது. 25 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளது. பாமகவிற்கு 23 ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது தேமுதிக.

15+1 ஓகேவா?

15+1 ஓகேவா?

அதே நேரத்தில் அதிமுகவோ ஏற்கனவே 48 தொகுதிகளை சுளையாக இரண்டு கட்சிகளுக்கு கொடுத்து விட்டது. தேமுதிகவிற்கும் 25 கொடுத்து விட்டால் தமகா உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என நினைக்கிறது. 15 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியையும் விட்டுத்தர முன் வந்துள்ளது அதிமுக.

நேர்காணலை ஆரம்பித்த தேமுதிக

நேர்காணலை ஆரம்பித்த தேமுதிக

அதிமுக தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார் விஜயகாந்த். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார். தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படுமா? ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? பார்க்கலாம்.

English summary
AIADMK co-ordinator and deputy prime minister OPS has said that DMDK's alliance with AIADMK will continue. O. Panneer Selvam said that the block allocation talks will be held this evening. AIADMK has decided to give 15 seats to DMDK in AIADMK alliance. DMDK has given a list of 25 blocks to be given.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X