சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபாசம் அப்படீன்னு சொல்லக்கூடாது.. ஸ்டாலின் பேச்சுக்கு 2 வருடம் கழித்து பொங்கும் அதிமுக!

Google Oneindia Tamil News

சென்னை: வைதீக முறையிலான திருண நிகழ்ச்சி குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு, அதிமுக கட்சி நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ்' கண்டனத்தை தெரிிவித்துள்ளது.

வைதீக திருமண முறை பற்றி ஸ்டாலின் முன்பு ஒருமுறை பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அதில், ஹோம குண்டத்தில் இருந்து வரும் புகையால், மணமக்களுக்கு அழுகைதான் வருகிறது. சமஸ்கிருத மந்திரங்கள் மிகுந்த ஆபாச அர்த்தங்களை கொண்டவை என்றெல்லாம் ஸ்டாலின் கருத்து கூறியிருந்தார்.

AIADMK slams Stalin for barb against Vedic ceremony

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வாத, விவாதங்கள் எழுந்துள்ளன. ஸ்டாலின் கருத்து பொய்யானது என, வலதுசாரிகள் கண்டித்து வரும் நிலையில், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழும், ஸ்டாலினை கண்டித்துள்ளது.

மத அடிப்படையில் மக்களை பிரித்தால், சிறுபான்மையினர் வாக்குகளை பெறலாம் என முயற்சி நடந்துள்ளது என அந்த கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன், இந்த கருத்துக்காக ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அனைத்து மக்களுக்குமானதாகவே ஒரு அரசியல் கட்சி இருக்க வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட வகையில்தான் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று யாரும் கூற உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய, திமுக செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த வீடியோ 2 வருடங்களுக்கு முந்தையது. அரசியல் ஆதாயத்திற்காக வலதுசாரிகள் இதை வெளியிட்டுள்ளனர். வீடியோவில் சில பகுதிகள் மட்டுமே காட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

English summary
The ruling AIADMK slammed DMK president M K Stalin Tuesday accusing him of trying to divide people on religious lines after a two-year-old video clip surfaced on social media purportedly showing him criticising Vedic ceremonies of weddings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X