சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூடு பிடிக்கிறது.. ஸ்டாலின் ஸ்டைலில் களமிறங்கிய அதிமுக.. உள்ளாட்சி தேர்தலுக்காக திண்ணை பிரச்சாரம்!

உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகும் வகையில் அதிமுக கட்சியினர் திண்ணை பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சூடு பிடிக்கிறது.. உள்ளாட்சி தேர்தலுக்காக திண்ணை பிரச்சாரம்!

    சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகும் வகையில் அதிமுக கட்சியினர் திண்ணை பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

    தமிழகம் அடுத்த தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இந்த அறிவிப்பை வெளியிடலாம்.

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி போலவே உள்ளாட்சி தேர்தலில் கலக்கு அதிமுக முடிவு செய்துள்ளது.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக கட்சி தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளது. அதன்படி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எல்லோரும் தங்கள் தொகுதியில் களமிறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும். தங்கள் தொகுதியில் இருக்கும் உள்ளாட்சி தொகுதியை எம்எல்ஏக்கள்தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக கூறியுள்ளது.

    யார் பொறுப்பு

    யார் பொறுப்பு

    இதற்காக தனிப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்காக வரும் 6ம் தேதி அதிமுக எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
    அதன்படி பிரச்சார குழு, வேட்பாளர்கள் தேர்வுக்குழு, வாக்குறுதி குழு என்று மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட குழுக்களை அதிமுக உருவாக்க உள்ளது.

    திண்ணம்

    திண்ணம்

    தற்போது இதற்காக இன்னொரு பக்கம் அதிமுக தீவிர திண்ணை பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர்தான் தீவிரமாக திண்ணை பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்கள் ஸ்டைலில் தற்போது அதிமுக களமிறங்கி உள்ளது.

    விஜயபாஸ்கர் பிரச்சாரம்

    விஜயபாஸ்கர் பிரச்சாரம்

    புதுக்கோட்டை நகரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திண்ணை பிரசாரத்தில் இன்று ஈடுபட்டார். இதேபோல் தமிழகம் முழுக்க அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் திண்ணை பிரச்சாரம் செய்ய உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகிறார்கள்.

    பொதுமக்கள் கோரிக்கை

    பொதுமக்கள் கோரிக்கை

    பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அமைச்சரிடம் கொடுத்தனர். இதேபோல் முதல்வர் பழனிச்சாமியும் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அடுத்த வாரம் அவர் தமிழகத்தில் பிரச்சாரத்தை தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    AIADMK starts their work for Local Body election: MLA and MP on the floor for another victory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X