சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயப்படாதீங்க.. மறுபடியும் சேர்ந்தே போறோம்.. அமித் ஷாவின் அதிரடி முடிவு.. யோசனையில் அதிமுக!

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah Plan : ஓபிஎஸ் -சை வைத்து அமித்ஷா போடும் திட்டம்!- வீடியோ

    சென்னை: அரசியல் எப்படியெல்லாம் கண்ணாமூச்சி காட்டுகிறது பாருங்கள்! காஷ்மீர் விவகாரத்தில் அலேக் அதிரடி நடவடிக்கை எடுத்ததன் மூலமாக சர்வதேச அரசியல் சாணக்கியர்களின் லிஸ்டில் டிரெண்டிங்காகி இருக்கிறார் அமித்ஷா.

    சொல்லப்போனால் கடந்த சில நாட்களாக கூகுள் 'Search Engine' அகில உலக அளவில் அதிகம் தேடியது அமித்ஷாவின் விக்கிபீடியாவைத்தான். இதன் மூலம் மோடியின் மார்க்கெட்டையே கொஞ்சம் பீட் அடித்துவிட்டார் அமித்! என்று புகழப்பட்டிருக்கிறார். இன்றைய தேதிக்கு மோடியை விட அமித்ஷாவின் பெயரை கேட்டால்தான் பி.ஜே.பி. புருவத்தை உயர்த்துகிறது, எதிர்கட்சிகள் கரித்துக் கொட்டுகின்றன.

    அப்பேர்ப்பட்ட அமித்ஷாவே முன்வந்து நட்புக் கரம் நீட்டியும் கூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயங்கி, வருந்தியிருக்கிறார்! என்று அ.தி.மு.க.வின் தலைமை கழகத்திலிருந்து கிசுகிசுப்புகள் கேட்கின்றன.

    ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு!ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு!

    ஏன் இந்த வருத்தம்

    ஏன் இந்த வருத்தம்

    அப்படி என்ன சொல்லிட்டார் அமித்ஷா? அதுக்கு எடப்பாடிக்கு ஏன் வருத்தம்? என்று அந்த அலுவலக தரப்பில் விசாரித்தால் தக வல்கள் இப்படி வந்து விழுகின்றன. "கடந்த நாடாளுமன்ற தேர்தல்லேயே பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க எங்க கட்சியில் எடப்பாடியார் முதல் கடைசி தொண்டர் வரை யாருக்குமே விருப்பமில்லை. காரணம், தமிழக மக்களுக்கு அந்த கட்சியை பிடிக்கலைன்னு நல்லாவே தெரியும்.

    ஆதரவு பெருசா சீர்குலையலே

    ஆதரவு பெருசா சீர்குலையலே

    ஆனால் ரெண்டு வருஷமா ஆட்சியை கவிழாம காப்பாத்திட்டு இருக்கிற நன்றிக்கடனுக்காக கூட்டணியை சகிச்சுக்கிட்டோம். பா.ஜ.க.வோடு கூட்டு வெச்ச ஒரே காரணத்தால்தான் ஒத்த தொகுதியை தவிர அத்தனையிலும் தோற்றோம். எங்க மேலே அவ்வளவு வெறுப்பிருந்திருந்தால் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாஷ் அவுட் ஆகியிருப்போமே. ஆக ஒருகுறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கிதான் எங்களை வெறுக்குது, மீதி அப்படியேதான் ஆதரவு தருதுங்கிறது நிரூபணமாயிடுச்சு.

    அரை மனது

    அரை மனது

    இந்த நிலையில் அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைக்கவே கூடாதுங்கிற எண்ணத்துலதான் முதல்வர் எடப்பாடியாரும் மற்றவர்களும் இருக்கிறோம். பன்னீரை பற்றி இந்த இடத்தில் ஏன் குறிப்பிடலேன்னா அவர் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டிய பா.ஜ.க.வின் வி.ஐ.பி. ஆகிட்டார் அதனாலதான். ஆட்சி கலைப்பு, ரெய்டுன்னு எதை சொல்லி மிரட்டினாலும் மீண்டும் பா.ஜ.க.வின் நட்பை ஏத்துக்கிறதில்லைங்கிறதுதான் இயற்றப்படாத தீர்மானமா கட்சியில் இருக்குது.

    லோக்கல் தலைவர்களுக்கு குட்டு

    லோக்கல் தலைவர்களுக்கு குட்டு

    ஆனால் சமீபத்துல சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள் கவர்னர் மாளிகையில் சந்திச்சிருக்காங்க. அப்போ தமிழகத்தில் பா.ஜ.க.வின் மோசமான நிலை குறித்து ஆவேசமாக பேசிய அமித்ஷா, அடுத்த தேர்தல்களிலும் எங்க கட்சியுடனே (அ.தி.மு.க.) அப்படின்னு அழுத்தி சொல்லியிருக்கார். எங்க கூட்டணியை உறுதி செஞ்சுட்டுதான் போயிருக்கிறார்.

    முதல்வரின் சோர்வு

    முதல்வரின் சோர்வு

    இந்த தகவல் முதல்வர் எடப்பாடியாரின் கவனத்துக்கு வந்ததும் ரொம்பவே சோர்வாயிட்டார் தலைவர். இவ்வளவு குழப்பங்களுக்குப் பிறகும் கூட அ.தி.மு.க.வின் விசுவாசிகளும், அபிமானிகளும், குறிப்பிட்ட சதவீத மக்களும் எங்க கட்சியை ஆதரிக்கிறாங்க, மீண்டும் ஆதரிக்க தயாரா இருக்கிறாங்க. ஆனால் அவங்க யாருக்குமே பா.ஜ.க.வுடனான எங்கள் கூட்டணி பிடிக்கலை.

    கூட்டணியைத் தவிர வேறு வழியில்லை

    கூட்டணியைத் தவிர வேறு வழியில்லை

    இதை அமித்ஷாஜி நல்லாவே உணர்ந்து வெச்சிருக்கிறார். ஆனாலும் மீண்டும் எங்களையும் அவங்களோடு சேர்த்து புதைகுழிக்குள் இழுப்பதை எப்படி எடப்பாடியாரால் சகிச்சுக்க முடியும்? கட்சியும், ஆட்சியும், கழக வாக்கு வங்கியும் சிதறுவதில், சிதைவதில் அவருக்கு மிகப்பெரிய மன வருத்தம். ஆனால் அதேவேளையில் அமித்ஷா மீண்டும் நட்புக்கரம் நீட்டுவதை பன்னீர்செல்வம் முழு மனதோடு வரவேற்கிறார்." என்று முடித்தார்கள்.

    - ஜி.தாமிரா

    English summary
    Sources say that AIADMK is still in half mind on the alliance of BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X