சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கூட்டணிக்கு தலைமை.. முதல் முறையாக இறங்கிப் போகும் அதிமுக?

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajini Praises Amit shah | காஷ்மீரை இரண்டாக பிரித்த அமித்ஷா..ரஜினிகாந்த் அதிரடி பாராட்டு!

    சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த்-பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுகவின் வரலாற்றில் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் கட்சியே ஆரம்பிக்காத தலைமையை ஏற்று இறங்கிப் போக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய காலத்திலும் சரி... அகில இந்திய அண்ணா திமுகவாக மாற்றிய காலத்திலும் சரி.. சட்டசபை தேர்தல்களில் அக்கட்சியின் தலைமையின் கூட்டணி... லோக்சபா தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் தலைமையில் கூட்டணி.

    எம்ஜிஆர் மறைவுகுப் பின்னரும் ஜெயலலிதாவும் இதே பார்முலாவைத்தான் கடைபிடித்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடித்தளம் நிலைகுலைந்து பாஜக அதனை தாங்கி வருகிறது.

    நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பற்றி என்ன தெரியும்?.. விஜய் சேதுபதியோடு சண்டை போடும் தமிழிசை! நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பற்றி என்ன தெரியும்?.. விஜய் சேதுபதியோடு சண்டை போடும் தமிழிசை!

    நிராகரித்த மக்கள்

    நிராகரித்த மக்கள்

    இதனால் பாஜகவுக்கு ஆதரவாகவே பெரும்பாலான நிலைப்பாடுகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. பாஜகவின் ஆதரவுடன்தான் அதிமுக என்கிற நிலையை தமிழக மக்கள் ஏற்கவில்லை. இதனைத்தான் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

    வேலூரில் பாடம்

    வேலூரில் பாடம்

    இதை உணர்ந்துகொண்டுதான் வேலூர் லோக்சபா தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்ட தோற்றத்துடன் களம் இறங்கி பெரும் வாக்குகளைப் பெற்றது அதிமுக. ஆனால் இந்த புதிய நிலைப்பாடும் நீண்டகாலம் நீடிக்காது என்பதை நேற்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

    ரஜினியின் பேச்சு

    ரஜினியின் பேச்சு

    சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்த், அமித்ஷா மோடியை அர்ஜூனர் - கிருஷ்ணர் என வர்ணித்தார். அதேபோல் வெங்கையா நாயுடு மற்றும் அமித்ஷாவுக்கும் முதல்வர் எடப்பாடியார் புகழாரம் சூட்டினார்.

    தலைமை யார்?

    தலைமை யார்?

    இந்த நிகழ்ச்சியானது ரஜினிகாந்த் கூட்டணி- பாஜக- அதிமுக கூட்டணிக்கான முதலாவது அச்சார நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவில் இன்னொரு கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இப்படியான ஒரு கூட்டணி அமையப் போவதுதான் தெரிந்த கதையாயிற்றே.. வழக்கம் போல கூட்டணிக்கு நாம்தானா தலைமை? என்கிற கேள்விக்கு மட்டும் அக்கட்சி தலைவர்களிடத்தில் பதிலேதும் இல்லை.

    இரட்டை தலைமையால் சர்ச்சை

    இரட்டை தலைமையால் சர்ச்சை

    ஏனெனில் அதிமுகவின் இரட்டை தலைமை பெரும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. அதிமுகவில் யாரை முன்னிறுத்துவது என்கிற குழப்பமும் இருக்கிறது. பாஜகவில் யாரை முன்னிறுத்தினாலும் அது கை கொடுக்கப்போவது இல்லை என்பது திட்டவட்டமான முடிவு. தற்போதைய நிலையில் ரஜினிகாந்த் தலைமையில் கூட்டணியை உருவாக்கிப் பார்ப்பது என்பதுதான் இந்த அணியின் முன் உள்ள வாய்ப்பு.

    அதிமுக இறங்கிப் போகிறது

    அதிமுக இறங்கிப் போகிறது

    இதை அதிமுக கட்டாயம் ஏற்றாக வேண்டிய நெருக்கடியில்தான் உள்ளது. அதாவது அதிமுகவின் வரலாற்றில் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக இன்னொரு கட்சியின் தலைமையை ஏற்று இறங்கிப் போக தீர்மானித்திருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது.

    English summary
    Sources said that AIADMK may accept Super Star Rajinikanth lead alliance to Tamilnadu Assembly Elections 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X