சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை வேளச்சேரி தொகுதியில் 92-வது வாக்கு சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 72.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவீதம் குறித்து இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்கள் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

Newest First Oldest First
6:11 AM, 17 Apr

சென்னை வேளச்சேரி தொகுதியில் 92-வது வாக்கு சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு
7:24 PM, 7 Apr
தமிழ்நாடு

தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கவோ, அவதூறு கருத்துகளையோ தான் பேசவில்லை தேர்தல் ஆணையத்திற்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் தனது தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் திரித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம். என்னுடைய பேச்சினை தவறாக அர்த்தம் கற்பித்துப் புகார் அளித்துள்ளனர் - உதயநிதி. என்னுடைய இரண்டு வார்த்தைகளை வைத்து என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனக்கு வாய்ப்பளித்தால் முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயாராக உள்ளேன் - உதயநிதி.
11:39 AM, 7 Apr
தமிழ்நாடு

பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதம் வாக்குகள் பதிவு. எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீதம் வாக்குகள் பதிவு .
11:37 AM, 7 Apr
தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் 85.43 சதவீதம் வாக்குகள் பதிவு. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதம் வாக்குகள் பதிவு. தி.நகர், வேளச்சேரி, மைலாப்பூர், சைதாப்பேட்டையில் 57%க்கும் குறைவான வாக்குப்பதிவு. சோழிங்கநல்லூர், சேப்பாக்கம், துறைமுகம் உள்பட சென்னையில் பல தொகுதிகளில் 60%க்கு கீழ் வாக்குப்பதிவு .
11:37 AM, 7 Apr
தமிழ்நாடு

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 72.76 சதவீதம் வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம். 234 தொகுதிக்கும் வாக்கு சதவீதம் குறித்து இறுதி பட்டியல் வெளியீடு.
10:04 PM, 6 Apr
தமிழ்நாடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பது நமது தலையாய கடமை . திமுக வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை . 24 மணி நேரமும் இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் . தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்
8:21 PM, 6 Apr
தமிழ்நாடு

தமிழகத்தில் மொத்தம் 71.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு. 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது
7:55 PM, 6 Apr

வாக்குப்பதிவு நிறைவடைந்ததை முன்னிட்டு வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன
7:33 PM, 6 Apr
தமிழ்நாடு

சென்னை வேளச்சேரி தொகுதி தரமணியில் வாக்கு சாவடியை கைப்பற்றி அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக புகார்
7:29 PM, 6 Apr

5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்: இரவு 7.11 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு . தமிழ்நாடு- 65.11% . புதுச்சேரி- 78.13% . கேரளா- 70.04% . மேற்கு வங்கம் (3வது கட்டம்)- 77.68% . அஸ்ஸாம் (3வது மற்றும் இறுதி கட்டம்) 82.29%
7:14 PM, 6 Apr
தமிழ்நாடு

தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது. 234 தொகுதிகளில் 3998 வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு முடிந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாநிலம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கொரோனா பாதித்தவர்கள் கொரோனா தடுப்பு கவச உடைகளுடன் வாக்களித்தனர்
7:13 PM, 6 Apr

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாமில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது
7:12 PM, 6 Apr
தமிழ்நாடு

தமிழகத்தில் சில சம்பவங்களை தவிர சட்டசபை தேர்தல் பொதுவாக அமைதியாக நடைபெற்றது
7:10 PM, 6 Apr
தமிழ்நாடு

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 2-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
7:10 PM, 6 Apr
தமிழ்நாடு

தமிழகத்தில் கடுமையான வெயில், கொரோனா அச்சம், கட்டுப்பாடுகளுடன் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது
7:09 PM, 6 Apr
மேற்கு வங்காளம்

மேற்கு வங்க மாநிலத்தில் 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்தது
7:07 PM, 6 Apr

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது
7:07 PM, 6 Apr
தமிழ்நாடு

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது
6:57 PM, 6 Apr

ஏப்ரல் 29-ந் தேதி மாலை முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும்
6:57 PM, 6 Apr
கேரளா

கேரளாவில் 6.30 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு
6:56 PM, 6 Apr
மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29 வரை மேலும் 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது
6:56 PM, 6 Apr
மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தில் 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைகிறது
6:56 PM, 6 Apr

திமுக சின்னம் பொறித்த சட்டையுடன் வந்து வாக்களித்த உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
6:56 PM, 6 Apr

தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாமில் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைகிறது
6:55 PM, 6 Apr
தமிழ்நாடு

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்னும் சில நிமிடங்களில் நிறைவடைகிறது
6:55 PM, 6 Apr
அஸ்ஸாம்

அசாம் சட்டசபை தேர்தலில் பகல் 6.30 மணி நிலவரப்படி மொத்தம் 80.32% வாக்குகள் பதிவாகி உள்ளன
6:51 PM, 6 Apr
தமிழ்நாடு

இரவு 7 மணி வரை அனைவரும் வாக்களிக்க அனுமதி- தேர்தல் ஆணையம்
6:51 PM, 6 Apr
தமிழ்நாடு

கொரோனா தடுப்பு கவச உடையுடன் வாக்களித்தார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்
6:43 PM, 6 Apr

புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குகள் பதிவு
6:42 PM, 6 Apr
தமிழ்நாடு

அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் கொரோனா பாதுகாப்பு உடையுடன் வந்து வாக்களித்தார்
READ MORE

Tamil Nadu Assembly Election 2021 Live Updates Voting Today on 234 constituencies
English summary
Here is live Updates of Tamilnadu Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X