Just In
அதிமுகவில் நாளை மறுநாள் விருப்ப மனு செலுத்தியவர்களிடம் நேர்காணல்
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அதிமுகவில் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை பொதுத்தேர்தல்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்களிடம் வரும் 4-ந் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் 2 கட்டங்களாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும். விருப்ப மனு பெற்றதற்காக அசல் ரசீதுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.