சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித்ஷாவின் நெருக்கடிகளை எதிர்கொள்வது எப்படி? நாளை மறுநாள் அதிமுக ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும் நிலையில் பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக விவாதிக்க அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது.

Recommended Video

    அமித்ஷாவின் நெருக்கடிகளை எதிர்கொள்வது எப்படி? | Oneindia Tamil

    தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கட்சிகளின் வியூகங்கள், நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார்.

    வரப்போகிறார் அமித்ஷா.. அதிரடியில் அறிவாலயம்.. கனிமொழிக்கு பதவி.. அழகிரிக்கும் கிரீன் சிக்னல்?வரப்போகிறார் அமித்ஷா.. அதிரடியில் அறிவாலயம்.. கனிமொழிக்கு பதவி.. அழகிரிக்கும் கிரீன் சிக்னல்?

    மு.க. அழகிரி திடீர் பிரவேசம்

    மு.க. அழகிரி திடீர் பிரவேசம்

    அமித்ஷாவின் வருகையை முன்வைத்து ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுவரை வெளியே வராத முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இப்போது திடீரென ஊடகங்களிடம் பேசி வருகிறார். பாஜகவின் ஆதரவுடன் கலைஞர் திமுகவை அழகிரி தொடங்க வாய்ப்பிருப்பதாக பரவலாக கருத்து நிலவுகிறது.

    ரஜினியுடன் சந்திப்பு?

    ரஜினியுடன் சந்திப்பு?

    அதேபோல் அரசியலுக்கு வர ரொம்பவே தயங்கும் நடிகர் ரஜினிகாந்தை அமித்ஷா சந்திப்பாரா? என்கிற கேள்வியும் வலம் வருகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தால் மட்டுமே அவரை சந்திக்கலாம் என்பது அமித்ஷா தரப்பு விருப்பம். ரஜினிகாந்த் தரப்போ இதற்கு எந்த பிடியும் கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருக்கிறதாம்.

    அதிமுக அணியில் 60 இடங்கள்?

    அதிமுக அணியில் 60 இடங்கள்?

    அத்துடன் அதிமுகவுடனான கூட்டணியை அமித்ஷாவின் பயணம் உறுதி செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் 50 முதல் 60 இடங்களை பாஜக கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு பக்கம் கணிசமான இடங்களில் போட்டியிடுவது; இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியான அதிமுகவின் வெற்றிக்கு குழிபறிப்பது என்கிற பீகார் பார்முலாவையும் பாஜக அரங்கேற்ற வாய்ப்பிருக்கிறது.

    நவ. 20-ல் அதிமுக ஆலோசனை

    நவ. 20-ல் அதிமுக ஆலோசனை

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளில் அதிமுகவின் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் வியூகங்கள், நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இதில் விவாதிக்கப்படக் கூடும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

    English summary
    AIADMK will hold important meeting on Nov 20 ahead of Union Minister Amit Shah's Chennai Visit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X