சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணுக்கெட்டிய தொலைவில் அதிமுகவில் கூட்டணி கட்சிகளையே காணோமே?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் ஓய்ந்திருந்தபோதும் அதன் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொமதேக உள்ளிட்டவை இணைந்து போட்டியிடுவது உறுதியாகி இருக்கின்றன. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள் ஏதோ ஒரு பிரச்சனையின் அடிப்படையில் நடைபெறவும் செய்கின்றன.

ஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா.. முதல்வரே இதை விரும்ப மாட்டாரே.. அதிர்ச்சியில் அதிமுக!ஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா.. முதல்வரே இதை விரும்ப மாட்டாரே.. அதிர்ச்சியில் அதிமுக!

பாஜக- அதிமுக

பாஜக- அதிமுக

ஆனால் அதிமுக தலைமையிலான அணியில் இந்த கட்சிகள்தான் இடம்பெறப் போகின்றன என எதுவும் உறுதியாக சொல்ல முடியாத நிலை இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவை கூட்டணியாக ஏற்க மறுத்து வருகிறது.

பாஜக தனித்து போட்டி?

பாஜக தனித்து போட்டி?

இருப்பினும் அதிமுகவின் கூட்டணியில்தான் இருக்கிறோம் என வம்படியாக பாஜக நிற்கிறது. என்னதான் பாஜக ஒட்டிக் கொண்டாலும் அந்த கட்சியிடம் இருந்து விலகி நின்றே தேர்தல் பணிகளை கடந்த காலங்களில் அதிமுக செய்திருக்கிறது. இப்போது பாஜகவும் தனித்து போட்டி என்று கூட சொல்ல தொடங்கி இருக்கிறது.

பாமகவுக்கு திமுக வலை?

பாமகவுக்கு திமுக வலை?

இதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவும் தேமுதிகவும் வழக்கம் போல அத்தனை கட்சிகளுக்கும் கதவை திறந்துவை பார்முலாவில் தீவிரமாக உள்ளன. பாமகவை எப்படியாவது திமுக கூட்டணிக்குள் திணித்துவிடுவது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் படுதீவிரமாக இருக்கிறார். இதற்கான பேச்சுகளை முன்னெடுத்தும் வருகிறார்.

இருபக்கமும் தேமுதிக பேச்சு

இருபக்கமும் தேமுதிக பேச்சு

தேமுதிகவுடன் சில மாதங்களுக்கு முன்னரே திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ராஜய்சபா சீட் ப்ளஸ் 20 என்ற பார்முலா முன்வைக்கப்பட்டது. இதனை உடனடியாக தேமுதிக ஏற்கவும் இல்லை. அந்த கட்சி வழக்கம் போல திமுக- அதிமுக இரண்டுடனும் சமநேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இன்றைய சூழ்நிலையில் அதிமுக அணியில்தான் கூட்டணி கட்சிகளை கண்ணுக்கெட்டிய தொலைவில் காணவில்லை என்ற நிலை உள்ளது.

English summary
Sources said that AIADMK may search new parties for alliance in Assembly Elections 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X