சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிற மாநிலங்களைப் போல அதிமுக ‘பெருந்தலைகள்’ கூண்டோடு அப்படியே பாஜகவில் ஐக்கியமாகின்றன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் தவிர பிற மாநிலங்களில் கட்சிகளை காலி செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. இதனால் பல கட்சிகள் கரைந்து பாஜகவின் கை ஓங்கி வருகிறது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜக கட்சிகளை கலைக்கும் விளையாட்டை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது. அதேநேரத்தில் அப்படி கலைத்து விளையாடும் போது படு உக்கிரமானதாகத்தான் இருக்கும் என்பதற்கான அடித்தளம் வலுவாக போடப்பட்டு வருகிறது.

திமுக எம்.எல்.ஏக்கள் இருக்க பயமேன்... ஆட்சி கவிழாது.. முதல்வர் எடப்பாடி நம்பிக்கை! திமுக எம்.எல்.ஏக்கள் இருக்க பயமேன்... ஆட்சி கவிழாது.. முதல்வர் எடப்பாடி நம்பிக்கை!

தாவும் அதிமுக ராஜ்யசபா எம்.பிக்கள்

தாவும் அதிமுக ராஜ்யசபா எம்.பிக்கள்

தற்போதைய நிலையில் அதிமுகவை தம் பிடியில் வைத்திருக்கிறது. முதல் கட்டமாக அதிமுகவின் 7 ராஜ்யசபா எம்.பிக்களை தம் பக்கம் வளைக்கப் போகிறது. இதன் மூலம் ராஜ்யசபாவில் பலத்தை உயர்த்த நினைக்கிறது பாஜக.

டெல்லியில் ஒப்புதல்

டெல்லியில் ஒப்புதல்

இதனைத் தொடர்ந்து கட்சிகளின் பெருந்தலைகளை வளைக்கும் படலத்தை செய்யப் போகிறதாம் பாஜக. அவ்வப்போது டெல்லி சென்று திரும்பும் அதிமுக பெருந்தலைகள் பலவும் தாங்கள் பாஜக பக்கம் தாவ தயார் என சாசனம் எழுதி கொடுத்துவிட்டு திரும்புகின்றனர்.

சிக்னலுக்கு காத்திருப்பு

சிக்னலுக்கு காத்திருப்பு

இந்த தலைகள் பாஜக மேலிடத்தின் சிக்னலுக்காக காத்திருக்கிறார்களாம். ஆட்சி முடியும் நிலையில் அதிமுக பெருந்தலைகள் பெருங்கூட்டமாக பாஜக பக்கம் தாவப் போகிறார்களாம். இதில் முதல்வர் எடப்பாடி தரப்புக்கு மிக மிக வேண்டிய தலைகளும் அடக்கமாம்.

திமுக தலைகளும் தாவல்?

திமுக தலைகளும் தாவல்?

பல மாநிலங்களில் இடதுசாரிகள், திரிணாமுல், காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளின் மிக முக்கிய தலைவர்களை வளைத்து தம்மை பெரும் பலசாலியாக்கிய அதே பார்முலாவைத்தான் இங்கேயும் நடைமுறைப்படுத்துகிறது பாஜக. அதிமுக பெருந்தலைகளைப் போல சில திமுக தலைகளும் கூட பாஜக பக்கம் தாவ தயாராக இருக்கின்றனராம்.

English summary
Sources said that Aiadmk senior leaders may jump to BJP versy soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X