சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொகுதிகளையே தீர்மானித்து களமிறங்கிய பாஜக- வெல்லும் இடங்களை கேட்கும் பாமக- விழிபிதுங்கும் அதிமுக!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அணியில் தொகுதிகள் எத்தனை? எந்தெந்த தொகுதிகள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இங்க நாங்கதான் போட்டி... கொடுத்துவிடுங்க என கோதாவில் இறங்கியிருக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடம்பிடித்து கேட்கிறதாம் பாமக.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 'குறைவாக ' இருந்தாலும் இந்த தொகுதிகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று பேட்டி கொடுத்தார் அன்புமணி ராமதாஸ்.

அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்? அன்புமணி ராமதாஸ் விளக்கம் அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்? அன்புமணி ராமதாஸ் விளக்கம்

பாமக கேட்கும் தொகுதிகள்

பாமக கேட்கும் தொகுதிகள்

இப்போது எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெறுகிறது. அதிமுகவிடம் பாமக கொடுத்திருக்கும் பல தொகுதிகள் அதிர்ச்சியைத்தான் தந்துள்ளனவாம்.. அதிமுக எளிதாக வெல்லும் என்கிற வாய்ப்புள்ள தொகுதிகள்தான் பாமக கொடுத்த பட்டியலில் அதிகம் இருக்கிறதாம்.

அதிமுக வெல்லும் தொகுதிகள்

அதிமுக வெல்லும் தொகுதிகள்

பாமகவை பொறுத்தவரை எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அனுப்பியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக ஆகக் கூடுமானவரை நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கிற தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் உறுதியாகவே நிற்கிறது. பாமகதான் இப்படி எனில் பாஜக தரும் குடைச்சல் அதிமுகவை ஆடிப் போக வைக்கிறது.

டெல்லி பாஜக

டெல்லி பாஜக

சசிகலா, தினகரனை அதிமுகவில் சேருங்க.. நாங்களும் அமமுகவும் தனியே உள் கூட்டணி வைத்து கொள்கிறோம்.. அதனால 40 தொகுதி கொடுங்க.. நாங்க பிரிச்சுக்கிறோம்.. இப்படியான நெருக்கடிகள் ஒரு பக்கம். இது டெல்லி லெவல் நெருக்கடிகள்.

தமிழக பாஜக

தமிழக பாஜக

இன்னொரு பக்கம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிற சில தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை தன்னிச்சையாகவே அறிவித்து இவருக்கு ஓட்டுப் போடுங்க என பிரசாரத்தையே தொடங்கி இருக்கின்றனர். அதுவும் நடிகைகள் குஷ்பு, கெளதமி என பிரபலங்களை வேட்பாளர்களாக வாக்காளர்களிடத்தில் அறிவித்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது பாஜக.

என்ன செய்யும் அதிமுக?

என்ன செய்யும் அதிமுக?

அங்கிட்டு பாமக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது.. இங்கிட்டு தொகுதிகளை தன்னிச்சையாகவே எடுத்துக் கொண்டு பாஜக பிரசாரமே செய்து வருகிறது. இந்த கடுமையான நெருக்கடிகளால் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் அதிமுக தரப்பு பெரும் பதற்றத்தில் இருந்து வருகிறது.

English summary
Sources said that AIADMK was very upset over the talks with PMK and BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X