சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. இதை பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results 2019: ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி செய்த தியாகம்- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள், அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்வி என்றுதான் கூற வேண்டும். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

    மோடியா, லேடியா என கடந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா சவால் விட்டு 37 தொகுதிகளை வென்றார். ஆனால், இந்த லோக்சபா தேர்தலில் அதே மோடியின் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுக.

    மற்றொரு பக்கம், டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து, அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக கூறிக்கொண்டார். சில எம்எல்ஏக்களும், அவர் பக்கம் தாவி, பதவியை இழந்தனர்

    என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே! என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே!

    எதிர்ப்பு அலைகள்

    எதிர்ப்பு அலைகள்

    2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 2வது முறையாக, தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறது அதிமுக. அதேபோல அதிமுகதான் 37 லோக்சபா தொகுதிகளை கடந்த முறை வென்றது. எனவே இயல்பாகவே அதிமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி அலை எழுந்திருக்க வேண்டும். மத்தியில் உள்ள மோடி அரசு 5 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பது இரட்டிப்பு அதிருப்தி அலையை உருவாக்கியிருக்கும்.

    ஜெயலலிதா, டிடிவி தினகரன்

    ஜெயலலிதா, டிடிவி தினகரன்

    இது மட்டுமா. வலுவான தலைவராக இருந்த ஜெயலலிதா இல்லாமல், இரட்டை தலைமையின் கீழ் இந்த தேர்தலை சந்தித்தது அதிமுக. அதிலும், டிடிவி தினகரன் தரப்பு ஒரு பக்கம் அதிமுக ஓட்டுக்களை பிரித்தது. பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது கடும் சோஷியல் மீடியா விமர்சனங்களுக்கும், கேலி கிண்டல்களுக்கும் உள்ளானது.

    செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

    தடைகள் பல

    தடைகள் பல

    22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றதால், ஆட்சி நிலைக்குமா அல்லது பறிபோகுமா என்ற ஸ்திரமற்ற தன்மையும் மக்கள் மனதில் பரவியிருந்தது. இப்படி ஆயிரமாயிரம் தடைகளை தாண்டியும்கூட, அதிமுக லோக்சபா தேர்தலில் தனது முத்திரையை பதித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

    சவால்கள்

    சவால்கள்

    ஆம்.. என்னதான் அதிக தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்தாலும்கூட, அதிமுக வாக்கு வங்கி கணிசமாக கவனிக்கத்தக்க வகையில் உள்ளது. மாலைநிலவரப்படி, அதிமுக பெற்றுள்ள வாக்கு சதவீதம் 19.25 என்ற அளவில் இருந்தது. இத்தனை சவால்களையும் மீறி இவ்வளவு வாக்கு சதவீதத்தை அதிமுக தக்க வைத்துள்ளது.

    வாக்கு சதவீதம் அமோகம்

    வாக்கு சதவீதம் அமோகம்

    2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை அதிமுக வென்றது. அப்போது அதன் வாக்கு சதவீதம், 44.9 சதவீதமாகும். இப்போது இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக கால அவகாசம் உள்ளது. அப்போது வாக்கு சதவீதம் இன்னும் கூடும். தொகுதிகளை இழந்தாலும், மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு உள்ள மவுசு பெரிதாக குறையவில்லை என்பதால், இது அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்விதான். எடப்பாடி-ஓபிஎஸ் இரட்டை தலைமை மக்கள் மனதில் பதிய ஆரம்பித்து வருவதால், வருங்காலங்களில் இன்னும் இவர்களுக்கு தேர்தல் எளிதாகவே மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

    பிற கட்சிகள்

    பிற கட்சிகள்

    தற்போதைய நிலையில், திமுக வாக்கு சதவீதம் 34.74, காங்கிரஸ் வாக்கு சதவீதம் 12.43, பாஜக வாக்கு சதவீதம் 2.75 என்ற அளவில் உள்ளது. எனவே, வாக்கு சதவீத அடிப்படையில், திமுகவுக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது அதிமுகதான். "அப்படி என்ன எங்களிடம் உங்களை ஹெவியா லைக் பண்ண வச்சது?" என்று அதிமுக தலைவர்கள் மக்களிடம் மைண்ட் வாய்ஸில் கேட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

    English summary
    AIADMK vote share is satisfied says political pundits, as the party stands 2nd after DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X