சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க வெளியே வந்தா நீங்க நடமாட முடியாது ஜாக்கிரதை.. பாஜகவை பகிரங்கமாக எச்சரித்த அதிமுக!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தொண்டர்கள் வெளியே வந்தால் பாஜகவினர் வெளியே நடமாட முடியாது என்று டிவி விவாதத்தில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் பேசியதாவது:

10 ஆண்டுகாலத்தில் எங்கு எந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவோ, ஜாதி மத சாயம் பூசிக் கொண்டோ செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கிறது. காவல்துறை யார் சொல்லியும் நடவடிக்கை எடுக்காமல் தாமாகவே தக்க நடவடிக்கை எடுக்கிறது.

இஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு இஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு

லெட்டர் பேடு கட்சிகள் புகார்

லெட்டர் பேடு கட்சிகள் புகார்

இந்த அரசாங்கம் யார் வீட்டு வேலைக்காரரும் அல்ல. அரசாங்கத்தின் அத்தனை பிரிவும் சரியாக செயல்படுகிறது. தமிழகத்தில் அனைத்து அதிகாரிகளுமே சிறப்பாகவே செயல்படுகின்றனர். அதனால் லெட்டர் பேடு கட்சிகள் எங்களை பாராட்டணும் என்றெல்லாம் அவசியம் இல்லை. இவர்கள் ஒன்றும் ஆதாரமும் கொடுப்பது இல்லை. யார் வேண்டுமானாலும் புகார் தரலாம். காவல்துறையில் புகார் மனு கொடுக்கலாம். காவல்துறைக்கு உண்மை எது? பொய் எது என்பது தெரியும்.

இதெல்லாம் நாகரிகமா?

இதெல்லாம் நாகரிகமா?

கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பித்து கிடக்கிறது. இந்த நிலையில் கேவலமாக, தலைவர்கள் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு அணிவிப்பது போடுவது என்பதெல்லாம் என்ன அர்த்தம்? இவர்களை எல்லாம் நாட்டில் நடமாடவே விடக் கூடாது. இவர்களை எல்லாம் குண்டாசில் போட வேண்டிய ஆட்கள். யார் செய்தாலும் தவறுதான். எதற்காக மறைந்த தலைவர்களை அவமானப்படுத்த வேண்டும். இது ஒரு இழிவான செயலாகவே தெரிகிறது. இது ஒரு அரசியலா?

எம்ஜிஆருக்கு காவி மாலையா?

எம்ஜிஆருக்கு காவி மாலையா?

காவி என்பது துறவிகளுக்கானது. அது புனிதமானதுதான். அதற்காக அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி மாலை போடுவீங்களா? இது நியாயமா? எம்.ஜி.ஆர் அதிமுகவினரின் இதய தெய்வம். அவர் ஒன்றும் பாஜகவின் தலைவர் அல்ல. அவருக்கு காவித் துண்டை போர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். காட்டுமிராண்டித்தனமான செயல். எம்ஜிஆர் சிலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது நியாயமான கருத்து. அவர் என்ன பாஜக தலைவரா? நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?

நடமாட முடியாது- ஜாக்கிரதை

நடமாட முடியாது- ஜாக்கிரதை

எம்ஜிஆரைப் பற்றி, முதல்வரைப் பற்றி பேச பாஜகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜாக்கிரதையாக இருங்க! அண்ணா திமுக தொண்டன் வெளியே வந்தா நீங்க நடமாட மாட்டீங்க ஜாக்கிரதை இவ்வாறு கோவை செல்வராஜ் பேசினார். இதற்கு விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜாக்கிரதையாக இருங்கள் என்ற கோவை செல்வராஜின் வார்த்தையை திரும்பப் பெற வேண்டும் என்றார். மேலும் எம்.ஜி.ஆரை யாரும் இழிவாக பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.

English summary
AIADMK Spokesperson Kovai Selvaraj has Warned that BJP on MGR's Statue Found Draped With Saffron Shawl.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X