சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக.. பாமக.. ஆளுக்கொரு ஆப்பு.. 234 தொகுதியிலும் அதிமுகவே போட்டி.. ஓ.எஸ். மணியன் பொளேர் பேச்சு!

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தையே நிறுத்தி தனித்து அதிமுக போட்டியிடும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.. இருபெரும் திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளை இணைத்து ஒவ்வொரு முறையும் களம் காணும்.. அந்த வகையில், அதற்கான வேலைகளை இந்த கட்சிகள் வெளிப்படையாக ஆரம்பிக்கவில்லை.. அதேசமயம், தங்கள் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கி வருகின்றன.. மறைமுக பேச்சுவார்த்தை, சீட் பேரம், கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

AIADMK will contest in 234 constituencies alone, says Minister O Maniyan

இதில், அதிமுகவில் கூட்டணியில் உள்ளது பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்.. சென்ற முறை கூட்டணியில் பாமகவை முதலிலேயே உள்ளே கொண்டு வந்த அதிமுக, இந்த முறை அதற்கான வேலைகளில் இறங்கவில்லை போல் தெரிகிறது.. அதேபோல, அதிமுகவுடன்தான் கூட்டணி என்று பாஜக சொல்லி வந்தாலும், இப்போது வரை அதற்கு கிரீன் சிக்னல் அதிமுகவில் இருந்து கிடைக்கவில்லை.. மிச்சம் இருக்கும் தேமுதிகவும், சிங்கிளாகவே எதிர்கொள்வோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் கட்சியை பற்றியும், வரப்போகும் தேர்தல் குறித்தும் சொன்னதாவது:

32 வருஷங்களுக்கு பிறகு ஆண்ட கட்சியே மறுபடியும் ஆட்சியை பிடித்தது என்ற சரித்திரத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படைத்தார்... தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய வேண்டும் என்பதுதான் ஒரு தாயின் ஆசை... அந்த தாயின் ஆசையை நிறைவேற்றுகிற வகையில், 2021ல் நடைபெறும் பொதுத்தேர்தலில் அதிமுக மீண்டும் தமிழகத்தில் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும்.

அந்த சரித்திரத்தை முதல்வர் எடப்பாடி தலைமையில் ஓபிஎஸ் வழிகாட்டுதலுடன் நடத்திக் காட்டுவோம். அதிமுகவை பொறுத்தவரை, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியாக 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தையே நிறுத்தி தனித்துகளம் காண உள்ளோம்.. ஆட்சியையும் பிடித்து காட்ட இருக்கிறோம்.. அதனால், எனவே, மக்களோடு கூட்டணி என்கிற முறையில் தேர்தலை நடத்தி காட்டுவோம்" என்றார்.

ஒருபக்கம் சீட் பேரத்துக்காக "தனித்து களம்" என்று பிரேமலதா அன்று அறிவிக்க.. இன்னொரு பக்கம் நம்மை விட்டு களம் காண முடியாது என்ற தெம்பில் பாமக எதிர்நோக்கி இருக்க.. மற்றொரு பக்கம் இலவு காத்த கிளியாக பாஜக காத்து கிடக்க.. தனித்து போட்டி என்று அமைச்சர் இப்போது அறிவித்துள்ளது கூட்டணி கட்சிகளை தலைசுற்ற வைத்து வருகிறது.. அமைச்சர் மணியன் அதிகாரப்பூர்வமாக சொன்னாரா? அல்லது அவருடைய சொந்த கருத்தா என்று தெரியவில்லை.. ஆனால் , இந்த பேட்டிதான் தற்போது தமிழக அரசியல் களத்தை கிறுகிறுக்க வைத்து வருகிறது.

English summary
AIADMK will contest in 234 constituencies alone, says Minister O Maniyan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X