சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்விக்கடன் ரத்து.. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து.. நீட் விலக்கு.. அதிமுகவின் வாக்குறுதி!

அதிமுக தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியாகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல திட்டங்களுடன் வெளியானது தேர்தல் அறிக்கை

    சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியானது. அதிமுக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக கட்சி லோக்சபா தேர்தலுக்காக வேகமாக தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக நேற்று முதல்நாள்தான் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது.

    திமுக அறிக்கை வெளியான சில நிமிடங்கள் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    விவசாயிகள், இல்லதரசிகள், அரசு ஊழியர்களின் மனங்களை குளிர்விக்கும் திமுக தேர்தல் அறிக்கை விவசாயிகள், இல்லதரசிகள், அரசு ஊழியர்களின் மனங்களை குளிர்விக்கும் திமுக தேர்தல் அறிக்கை

     யார் செய்தார்

    யார் செய்தார்

    அதிமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மட்டும் மொத்தம் 7 பேர் இடம்பிடித்து இருக்கிறார்கள். சி. பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், சி.வி சண்முகம், செ. செம்மலை, ரவி பெர்னார்ட், பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

     எப்படி தயாரிப்பு

    எப்படி தயாரிப்பு

    இவர்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு பேச்சுவார்த்தைகள், கூட்டங்களுக்கு இடையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறார்கள். மக்களிடம் கருத்து கேட்டும், அதிமுக தொண்டர்களிடம் கருத்து கேட்டும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிக்கையை வெளியிட்டார்.

    [உங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்]

     வறுமை ஒழிப்பு

    வறுமை ஒழிப்பு

    • அதிமுக தேர்தல் அறிக்கையில் பின்வரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • வறுமை ஒழிப்பிற்காக மாதம் ரூ.1500 வழங்கப்படும்.
    • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இந்த பணம் வழங்கப்படும்.
    • புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பயிற்சிகள் அளிக்கப்படும்.
    • எம்ஜிஆர் தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்படும்.
    • வறட்சிக்கு எதிராக நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டு வரப்படும்.
    • கடலில் கலக்கும் நீர் வறட்சியால் பாதிக்கப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
    • காவிரி - கோதாவரியை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    • காவிரியில் இருந்து மோகனூர் கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
    • காவிரி இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டு வரப்படும்.
     கல்வி கடன்

    கல்வி கடன்

    • கல்லூரி கல்வி கடன்களை ரத்து செய்வோம்.
    • வேளாண் கடன்களுக்காக உறுதியான திட்டம் ஒன்றை கொண்டு வருவோம்.
    • கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்துவோம்.
    • எஸ்சி/ எஸ்டி/ பி.சி/ எம்.பி.சி மக்களுக்காக புதிய இடஒதுக்கீட்டு சட்டம் கொண்டு வரப்படும்.
    • பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம்.
    • மத்திய அலுவல் மொழியில் ஒன்றாக தமிழை அறிக்கை வலியுறுத்துவோம்.
    • காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க வலியுறுத்துவோம்.

    நீட் தேர்வு

    • நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.
    • சாதி சான்றிதழில் மாற்றம் செய்யாமல் மதம் மாற எதுவாக சட்டம் கொண்டு வரப்படும்.
    • இலங்கை அகதிகளுக்கான நலவாழ்வு சட்டம் கொண்டு வரப்படும்.
    • இலங்கை போர் குற்றத்தை விசாரிக்க மத்திய அரசு வலியுறுத்துவோம்.
    • பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்துவோம்.
    • புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம், என்று அதிமுக அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    AIADMK will release its manifesto for Lok Sabha elections 2019 today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X