சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி!

2021ல் அதிமுக ஆட்சி மலரும், அதைதான் நடிகர் ரஜினிகாந்த் அதிசயம் நிகழும் என்கிறார் என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    2021-இல் சட்டசபை தேர்தலில் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி

    சென்னை: 2021ல் அதிமுக ஆட்சி மலரும், அதைதான் நடிகர் ரஜினிகாந்த் அதிசயம் நிகழும் என்கிறார் என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

    இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், கமலுடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். கட்சி தொடங்கிய பின் முடிவு செய்வோம். உறுப்பினர்களுடன் ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு அது.

    யாருடன் கூட்டணி, யார் முதல்வர் என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்துவார்கள். தமிழகத்தில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள், என்று குறிப்பிட்டார்.

    தேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி!தேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி!

    எந்த அதிசயம்

    எந்த அதிசயம்

    ரஜினிகாந்தின் பேட்டிக்கு தற்போது முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில், ரஜினி சொன்னது எந்த அதிசயம் என்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் அதிசயம் நடக்கும் என்று ரஜினி கூறுகிறார் என தெரியவில்லை. 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். 2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி தொடரும்.

    இதுதான்

    இதுதான்

    மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதைத்தான் அதிசயம் நிகழும் என ரஜினி கூறினார். ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவர் குறித்து கருத்து கூற முடியும். ரஜினி கட்சி தொடங்கினால் அவரை விமர்சிக்கலாம், ஆனால் அதற்கு முன்பே இப்போதே அவரை விமர்சிக்க முடியாது. இப்போது அவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தர கூடாது.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் இருந்த அதிமுக கூட்டணியே தொடரும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சட்டசபை இடைத்தேர்தல் போல உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் போட்டியிடுவோம்.

    மேயர் தேர்தல்

    மேயர் தேர்தல்

    உள்ளாட்சி தேர்தலில் மறைமுக மேயர் தேர்தல் என்பது திமுகவின் திட்டம்தான். ஆனால் இப்போது ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் அதை எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. இப்போது ஏன் ஸ்டாலின் திடீர் என்று மனம் மாறிவிட்டார் என்று தெரியவில்லை

    English summary
    AIADMK will rule again the state, That's what Rajini meant by wonder says TN CM Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X