சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 3ம் ரொம்ப முக்கியம்.. ஒரே போடு போட்ட இபிஎஸ்.. செம ஸ்பீட்.. மேஜிக்கை இன்றே தொடங்கியது அதிமுக!

Google Oneindia Tamil News

சென்னை: தடைகளை எல்லாம் கடந்து அதிமுக கட்சி தமிழக சட்டசபை தேர்தலுக்காக வேகம் காட்ட தொடங்கி உள்ளது.. வேகமாக செயல்பட்டு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்றே வெளியிட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மீட்டிங்குகளை அடுத்தடுத்து நடத்தி அதிமுக படுபிஸியாக இருக்கிறது. ஒரு பக்கம் கூட்டணி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலும் தீவிரமாக நடக்கிறது.

இதெல்லாம் போக இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னையில் நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகளை அதிமுக எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகிறது.

பாமக தேர்தல் அறிக்கையில் மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆல் பிரசன்ட்.. முரசு ஆப்சன்ட்.. என்ன காரணம்?பாமக தேர்தல் அறிக்கையில் மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆல் பிரசன்ட்.. முரசு ஆப்சன்ட்.. என்ன காரணம்?

சிக்கல்

சிக்கல்

இந்த தேர்தலை பொறுத்தவரை அதிமுகவிற்கு இருந்த பெரிய தலைவலி என்று பார்த்தால் அது அமமுகவும் சசிகலாவும்தான். ஆனால் சசிகலா அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்துவிட்டார். இதனால் அமமுகவும் தேர்தலுக்கு முன்பாக தனது பலத்தை இழந்து உள்ளது. தொடர் திருப்பங்களால் வாக்குகள் பிரியும் என்று எந்த கவலையும் இல்லாமல் அதிமுக தேர்தல் மீது மட்டும் கவனம் செலுத்த முடியும்.

தேர்தல் கவனம்

தேர்தல் கவனம்

இதனால் வேகமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு தேர்தல் மீது கவனம் செலுத்தும் எண்ணத்தில் அதிமுக உள்ளது. இன்னும் 5 நாட்களுக்குள் அனைத்தையும் செய்து முடிக்கும் பிளானில் அதிமுக இருக்கிறது. அதன்படி இன்று அதிமுக சார்பாக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. நேற்று விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடந்த நிலையில் இன்று முதல்கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது.

எத்தனை

எத்தனை

இன்று ஆறு சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அதிமுக சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதியில் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி போட்டியிடுகிறார்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறார். நிலக்கோட்டை தனி தொகுதியில் தேன்மொழி மீண்டும் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

பட்டியல்

பட்டியல்

மார்ச் 10ம் தேதிதான் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக அதிமுக மொத்தமாக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நாளை மாலைக்குள் மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து ஒப்பந்தங்களை செய்யும் முடிவில் அதிமுக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

3 விஷயங்கள்

3 விஷயங்கள்

சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றிபெற "வேட்பாளர், கூட்டணி, தேர்தல் அறிக்கை" ஆகிய மூன்று விஷயங்கள் ரொம்ப முக்கியம் என்று முதல்வர் பழனிசாமி கருதுவதாக அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த மூன்றையும் வேகமாக செய்து முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் முடிவு செய்துள்ளனர். திமுகவிற்கு முன்பாக அனைத்தையும் முடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்பதில் முதல்வர் இபிஎஸ் தீர்க்கமாக இருக்கிறாராம்.

காலக்கெடு

காலக்கெடு

அதிலும் இன்று அதிமுக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இருப்பது எல்லாம் ஸ்டார் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தேர்தலுக்கு வேகமாக தயாராகிவிட்டதை இந்த பட்டியல் காட்டுகிறது. ஒரு பக்கம் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் அதே நேரம் இன்னொரு பக்கம் பாஜகவுடனான கூட்டணி இன்று இறுதி செய்யப்படும் என்றும் கூறுகிறார்கள்.

English summary
AIADMK will speed up its process: To announces the candidates, alliance sharing soon ahead of the Tamilnadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X