சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாழ்க்கை ஒரு வட்டம்.. அதிமுக-திமுகவுக்கு நச்சுன்னு பொருந்தும்.. நம்ம வேணுகோபாலுக்கும் தான்

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்க்கை ஒரு வட்டம்.. அன்று ஜெயித்தவர்கள் இன்று படுதோல்வி அடைந்துள்ளனர். அதிமுக சார்பில் கடந்த 2014ம் ஆண்டு 3.23 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற வேணுகோபால் இந்த முறை, 3.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளார்.

இவர் மடடுமல்ல அதிமுக வேட்பாளர்கள் 12 தொகுதிகளில் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தோற்றுள்ளனர்.

ஜெயலலிதா இருந்த போது 37 தொகுதிகளை வென்ற அதிமுக, அவர் இல்லாமல், ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. ஜெயலலிதா என்ற வலிமையை இழந்த அதிமுக, ஒற்றுமையையும் இழந்ததாலேயே இப்படி ஒரு படுதோல்வியை சந்தித்துள்ளது.

அரிதிலும் அரிது... சந்திரபாபு நாயடுவுக்கு தற்காலிக சபாநாயகராகும் வாய்ப்பு! அரிதிலும் அரிது... சந்திரபாபு நாயடுவுக்கு தற்காலிக சபாநாயகராகும் வாய்ப்பு!

37 இடங்களில் தோல்வி

37 இடங்களில் தோல்வி

தேர்தலும் சரி வாழ்க்கையும் சரி வட்டம் என்பது அதிமுகவுக்கு திமுகவும் இப்போது புரிந்து இருக்கும். 2014ம் ஆண்டு தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வென்றது. அப்படியோ யூடர்ன் அடித்துள்ள திமுக தனது கூட்டணியோடு சேர்த்து இந்த முறை தமிழகத்தில் 37இடங்களில் வென்றுள்ளது தான் ஆச்சர்யம். முன்பு எப்படியெல்லாம் திமுக படுதோல்வி அடைந்ததோ அதுபோலவே இந்த முறை அதிமுக தோல்வி கண்டுள்ளது.

கடந்த முறை வெற்றி

கடந்த முறை வெற்றி

திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் கடந்த 2014ம் ஆண்டு 3.23 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் . ஆனால் இந்த முறை 3.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

அதிமுக தோல்வி

அதிமுக தோல்வி

இவரை தவிர ஆரணி தொகுதியில் ஏழுமலை, தென் சென்னையில் ஜெயவர்தன் (ஜெயக்குமார் மகன்), திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கரூரில் தம்பித்துரை, பெரம்பலூரில் என் ஆர் சிவபதி, நாமக்கலில் காளியப்பன், ஈரோட்டில் மணிமாறன், நீலகிரியில் தியாகராஜன், காஞ்சிபுரத்தில் மரகதம் குமாரவேல் உள்ளிட்ட அதிமுகவின் 12 வேட்பாளர்கள் வேட்பாளர்கள் இந்தமுறை 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வாக்குகுள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

காங்-திமுக படுதோல்வி

காங்-திமுக படுதோல்வி

கடந்த முறை திமுக மற்றும் காங்கிரஸ் தனித்து நின்றதால் படுதோல்வியை சந்தித்தது. அதேநேரம் கடந்த முறை தனித்து நின்று வெற்றி பெற்ற அதிமுக, இந்த முறை பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் என வலிமையான கூட்டணி அமைத்தும் படுதோல்வியை தழுவியுள்ளது- ஜெயலலிதா என்ற ஆளுமை இருந்த போது ஒற்றுமையாக இருந்த அதிமுகவினர், அவர் மறைந்த பின்னர் பதவி ஆசையில் பிரிந்து போனதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரன் பிரிவு, ஒபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்ற இரண்டு பிரிவு இவை எல்லாம் அதிமுகவின் தோல்வியை உறுதிபடுத்திவிட்டன.

பிரிந்த அமமுக

பிரிந்த அமமுக

அதேநேரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களவை தேர்தலை போல் மொத்தமாக தோற்காமல் 9 இடங்களை வென்று அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதிமுகவின் ஆட்சி இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிரச்னை இல்லாமல் செல்லும் என்றாலும் அதன்பிறகு வெற்றி பெற அதிமுகவினர் மீண்டும் ஒன்றுபட்டால் தான் சாத்தியம் என்கிறார்கள்.

English summary
aiadmk win last time 37 seat, but this time loss 37 seat in lok sabha polls, venugopal historical loss in thiruvallur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X