சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 6 மாநகராட்சி யாருக்கு.. கூட்டணிக்கு விட்டுத்தருமா அதிமுக.. பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கூட்டணிக்கு விட்டுத்தருமா அதிமுக.. பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்

    சென்னை: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை என இந்த 6 முக்கிய மாநகராட்சியை அதிமுக நிச்சயம் விட்டுத்தராது என்று சொல்கிறார்கள். இதனால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. புது மாநகராட்சிகளை மட்டுமே தர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளுமே தயாராகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றன.

    ஒவ்வொரு ஊரிலும் இதற்கு தானே காத்திருந்தோம் என்பது போல் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக சார்பில் அதிக அளவு விருப்பமனுக்களை வாங்கி வருகிறார்கள்.

    உதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்?உதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்?

    பழைய பார்முலா

    பழைய பார்முலா

    அதிமுக மற்றும திமுக என இரு பிரதான கட்சிகளுமே ஆட்சியில் இருக்கும் போது நடந்த முந்தைய தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் இவர்கள் தான் போட்டியிடுவார்கள். கூட்டணிகளுக்கு ஒரளவுக்குத்தான் ஒதுக்குவார்கள். ஆனால் இப்போது இரு கூட்டணியிலும் உள்ள பிற கட்சிகள் அதிக இடங்களை எதிர்பார்க்கின்றன.

    பாமக, தேமுதிக

    பாமக, தேமுதிக

    குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை தலா 2 முதல் 3 மேயர் பதவிகளை இந்தமுறை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று குறிக்கோளாக உள்ளன.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    ஆனால் அதிமுகவின் கணக்கோ வேறு விதமாக உள்ளது. ஜெயலலிதா பாணியை உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்க விரும்புகிறது. தங்கள் கட்சிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ள இடங்கள் எதையும் அதிமுக விட்டுத்தர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

    அதிமுக விருப்பம்

    அதிமுக விருப்பம்

    குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை என இந்த 6 முக்கிய மாநகராட்சியை நிச்சயம் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுத்தர அதிமுக தயாராக இல்லையாம். இந்த விஷயத்தில் கறாராக இருக்க அதிமுக விரும்புகிறதாம். அதேநேரம் மற்ற மாநகராட்சிகளில் சிலவற்றை கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாம்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கூட்டணி கட்சிகள் மறைமுக பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளார்கள். ஆனால் அதிமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

    அதிமுக பலம்

    அதிமுக பலம்

    ஏனெனில் ஜெயலலிதா மறைந்த போது பிளவு பட்டு கிடந்த அதிமுக கிட்டதட்ட பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. எனவே தனது கட்சி தொண்டர்களுக்கு சீட் கொடுக்க விரும்புகிறது. பல மாஜி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மேயர் மற்றும் முக்கிய நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டி போட்டு வருவதால் அவர்களை முதலில் சமாதானம் செய்ய வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. அதன்பிறகே உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிகளுக்கான தொகுதி பங்கீட்டை பற்றி அதிமுக யோசிக்கும் என்கிறார்கள்.

    English summary
    tamilnadu local body election 2019: AIADMK would not given Chennai, Coimbatore, Trichy, Madurai, Salem, nellai corporation to alliance parties
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X