சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்!

சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் உட்கட்சி பூசல் ஆரம்பமாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: 4 தொகுதிகளில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதில் ஒரு பெரிய இடியாப்ப சிக்கல் என்றால், வேட்பாளரை அறிவித்த பிறகு அடுத்த பஞ்சாயத்து அதிமுகவில் தலைதூக்கி உள்ளது!

இப்போதைக்கு 4 தொகுதிகளில் இரண்டில் உள்கட்சி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது. ஒன்று சூலூர், மற்றொன்று ஒட்டப்பிடாரம்!

ஒட்டப்பிடாரத்தில் சீட் கிடைக்க பலத்த போட்டி கடம்பூர் ராஜூக்கும், மோகனுக்கும்தான் நடந்தது! தனக்கு சீட் தந்தே ஆக வேண்டும் என்று மோகன் விடாப்பிடியாக நிற்க, கடம்பூர் ராஜுவின் ஆப்ஷன் ஜெயலலிதாதான்.. அதாவது ஒட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் துணை தலைவர் பெயர்தான் ஜெயலலிதா. ஆனால் மோகனுக்குதான் சீட் கிடைத்துள்ளது. இதனால் ஜெயலலிதா கடும் அதிருப்தியாகி போர்க்கொடி உயர்த்தி உள்ளாராம்.

அதிமுக மீது பிரேமலதா கடும் அதிருப்தி.. 4 தொகுதி இடைத் தேர்தலில் பதிலடிக்கு தயாராகும் தேமுதிக அதிமுக மீது பிரேமலதா கடும் அதிருப்தி.. 4 தொகுதி இடைத் தேர்தலில் பதிலடிக்கு தயாராகும் தேமுதிக

ஜெயலலிதா

ஜெயலலிதா

"மோகன் பொறுப்பில் இருந்தபோது இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. தவிர தொகுதி மக்களின் எதிர்ப்பும் மோகனுக்கு உள்ளது. அதனால் மோகனுக்குப் பதிலாக, வேற யாரை வேட்பாளராக அறிவித்தாலும் சரி" என்கிறார். இது அதிமுகவுக்கு மண்டை குடைச்சலை தந்துள்ளது. அதனால் உள்ளூர் அதிமுகவினர் ஜெயலலிதாவை சமாதானம் செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்!

சூலூர்

சூலூர்

சூலூர் தொகுதியைப் பொறுத்தவரை கொங்கு வேளாளர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதி. அதற்கு அடுத்த நிலையில் அருந்ததியர் சமுதாய மக்கள் உள்ளனர். தேவர், நாயுடு சமுதாய வாக்குகளும் இங்கு கணிசமாக உள்ளது.

மாதப்பூர் பாலு

மாதப்பூர் பாலு

ஆனால் இதற்கேற்றார்போலதான் வேட்பாளர் தேர்வு இருக்கும் என்றாலும், சீட் கேட்க நிறைய பேர் முன்வந்தார்கள். மறைந்த கனகராஜ் மனைவி ரத்தினம், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, ப.வெ.தாமோதரன், மாதப்பூர் பாலு என லிஸ்ட் நீண்டது. எனினும் ஆனால் அதிமுக வேட்பாளராக விபி கந்தசாமி நிறுத்தப்பட்டுள்ளார். முக்கிய காரணம் சாதீய ஓட்டுக்கள்தான்.

கந்தசாமி

கந்தசாமி

ஆனால் கந்தசாமிக்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. இவர் மறைந்த கனகராஜின் தம்பி, அதாவது சித்தப்பா மகன் ஆவார். இதனால் மாதப்பூர் பாலு, செ.ம.வேலுசாமியின் ஆதரவாளர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்களாம்.

சால்வை

சால்வை

இந்த விஷயம் தெரிந்து பதறிபோன கந்தசாமி எப்படியாவது இவர்களை சமாதானப்படுத்த வேண்டுமே, இல்லையென்றால், எதையாவது உள்ளடி வேலை செய்து ஏடாகூடம் ஆகிவிடப் போகிறது என்று நினைத்து, கந்தசாமி வீட்டுக்கே சால்வையுடன் சென்று சமாதான பேச்சில் இறங்கி விட்டார்கள்.

தேர்தல் பணி

தேர்தல் பணி

இதை தவிர, பெரும்பாலான இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர் கந்தசாமி வேட்பாளரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் பணி செய்ய மாட்டோம் என்றும் சொல்லி வருகிறார்களாம். இவர்களையும் சமாதானப்படுத்தும் வேலை நடக்கிறதாம்!

English summary
The announcement of the candidates has been fierce in the Local AIADMK, particulary in Sulur and Ottapidaram Constitutions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X