சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விர்ருன்னு ஏறுது மவுசு.. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீங்களா.. ஒரே அறிவிப்பில் வாயடைத்த எடப்பாடியார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மவுசு நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் கூடி கொண்டே வருகிறது.. இதற்கு ஒரே காரணம் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு பிளானும் யாராலும் யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளதுடன், கட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே அவரது செயல்பாடுகள் அமைந்து வருவதுதான்!

உள்ளாட்சி தேர்தலை நடத்தவே மாட்டீங்களா? என்று கோர்ட் வரை கேஸ் போட்டு கேட்டு கொண்டிருந்த எதிர்தரப்பினர் இப்போது ஒட்டுமொத்த சைலன்ட்டில் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு மறைமுக தேர்தல் என்ற அறிவிப்பும், நேற்று வெளியான உள்ளாட்சி தேர்தலின் அடுத்தடுத்த அறிவிப்பும்தான் அரசியல் கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகின்றன.

நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய வழக்கு.. சிதம்பரம் தீட்சிதருக்கு நிபந்தனை முன் ஜாமீன்நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய வழக்கு.. சிதம்பரம் தீட்சிதருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

அதிருப்தி

அதிருப்தி

இப்போது உள்ளாட்சி தேர்தலே நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக மீது எந்த கட்சியாலும் திணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், புதிதாக வெளியான அறிவிப்புகள் கூட்டணி கட்சிகளுக்கே அதிருப்தியை தந்துள்ளதாக தெரிகிறது.

சிக்கல்கள்

சிக்கல்கள்

எனினும் அதிமுக அரசு எதை பற்றியும் இப்போதைக்கு கவலைப்படுவதாக இல்லை.. ஆட்சியை வலுப்படுத்துவதிலும், தக்க வைப்பதிலும் முழு கவனத்தை செலுத்தி காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில், கட்சிக்குள்ளேயே சிக்கல்கள் எழ ஆரம்பித்துள்ளதாம். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஒரு பக்கம் என்றால், முன்னாள்களும், தேர்தலில் போட்டியிட்டு தோற்றுபோனவர்களும் சீட் கேட்க ஆரம்பித்துள்ளனராம். அதனால் முதல் வேலையாக முதல்வருக்கு இவர்களைதான் சமாளிக்க வேண்டி இருக்கிறது.

அறிவிப்பு

அறிவிப்பு

இதற்கு அடுத்ததாக, திமுகவை சமாளிக்க வேண்டி உள்ளது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே உள்ளாட்சி தேர்தலில் வலுவாக இருந்து வரும் திமுகவை வீழ்த்துவதற்காகவேதான் இந்த புது அறிவிப்பினை அதிமுக அரசு அறிவித்துள்ளதாக கூறுகிறார்கள்.

ரஜினி-கமல்

ரஜினி-கமல்

அது மட்டுமில்லை.. சட்டமன்றப் பொது தேர்தலைகூட இப்போதே நடத்தலாமா என்ற யோசனையும் எழுந்துள்ளதாம். இதற்கு ஒரே காரணம், ரஜினியும், கமலும்தான்.. அவர்கள் இருவரும் இன்னும் அரசியலில் இணையாத பட்சத்தில், இந்த இடைவெளியை சரியாக பயன்படுத்தி கொள்ளவே அரசு விரும்புவதாக தெரிகிறது.

சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தல்

கால நேரம் அதிகமாக விட்டுவிட்டால், திமுக வலுப்பெற்றுவிடும், ரஜினி-கமலை சமாளிக்க முடியாது என்பதே அதிமுகவின் எண்ணமாக இருக்கிறதாம். ஒருவேளை சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தினால், அதற்கு தன் கட்சியை வலுமிக்கதாகவும், சக்திமிக்கதாகவும் மாற்ற வேண்டியது இப்போதைய உடனடி அவசியமாகிறது.. அதற்காகத்தான், இந்த உள்ளாட்சி தேர்தலின் புதுபுது அறிவிப்புகள் வெளியாகின்றன.

திமுகவின் அதிரடி

திமுகவின் அதிரடி

எப்படியும், சொந்த கட்சிக்காரர்களை இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமை கைவிட்டு விடாது என்றாலும், கூட்டணி நிலைமை சற்று சந்தேகம்தான்.. அதனால் திமுகவும் உள்ளாட்சி தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் இப்போதே நிறைய பாடுபட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது!

English summary
The AIADMK is said to be considering whether to hold the assembly election in advance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X