சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேப்பியாக முடிந்த தீபாவளி.. பொங்கலுக்கு செம பிளான் போடும் அதிமுக.. அடுத்த திட்டம் இதுதானா?

உள்ளாட்சி தேர்தலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்த திட்டமிடுவதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Pongal Bonus 2020 | அதிமுக - வின் அடுத்த திட்டம் இதுதானா?-வீடியோ

    சென்னை: நடந்து முடிந்த தீபாவளி அதிமுகவுக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை தந்துள்ளது.. அதேபோல வரப்போகும் பொங்கல் பண்டிகையும் அதிமுகவுக்கு டபுள் மகிழ்ச்சியை தருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

    இரு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதனால் தீபாவளி பண்டிகை ஸ்வீட் எடு கொண்டாடு என்ற ரேஞ்சில் அமர்க்களமானது.

    இந்த இடைத்தேர்தல் வெற்றியானது, உள்ளாட்சி தேர்தலை இனி நடத்துவோம் என்ற அளவுக்கு தெம்பை தந்துள்ளது. விரைவில் தேர்தலும் நடக்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இடைத்தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ள திமுக, நிச்சயம் உள்ளாட்சி தேர்தலில் விட்டுக் கொடுக்காது என்பதால் புதுவித வியூகம் ஏதேனும் அமைக்கக்கூடும் என்று அதிமுக தரப்பு நினைக்கிறதாம்.

    சென்னையிலிருந்து திருச்சி வரை மேகக் கூட்டங்கள்.. விட்டு விட்டு மழை பெய்யும்.. வெதர்மேன்சென்னையிலிருந்து திருச்சி வரை மேகக் கூட்டங்கள்.. விட்டு விட்டு மழை பெய்யும்.. வெதர்மேன்

    பொங்கல் பண்டிகை

    பொங்கல் பண்டிகை

    அதனால், இந்த உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி கனியை பறிக்க பொங்கல் பண்டிகையை சாதகமாக பயன்படுத்த போவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்குக் காரணம், பொங்கல் பண்டிகை என்றால் தமிழகமே குஷியாக இருக்கும். தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகை பொங்கல்தான்.

    ஆயிரம் ரூபாய்

    ஆயிரம் ரூபாய்

    பொங்கல் சமயத்தில் அரசு சார்பில் பொங்கல் பரிசும் வழங்கப்படும். கடந்த முறை பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பணம் பொங்கலுக்கு தந்தார்கள். அது பெரும் சர்ச்சையாகி கோர்ட் வரை சென்றது. எந்த வருஷமும் இல்லாத வகையில், போன முறை அதிரடியாக, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், 1000 ரூபாய் பரிசுப் பணம் என்று அறிவிக்கப்பட்டு, அது விவாத பொருளாகியது. ஆனால் கோர்ட் கொடுக்கலாம் என பச்சைக் கொடி காட்டவே மக்களை சந்தோஷப்படுத்தியது தமிழக அரசு.

    பணம்

    பணம்

    எதற்காக ஆயிரம் ரூபாய் என்ற கேள்விக்கு "பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில்தான் பணம் தரப்படுகிறது" என்று அமைச்சர் ஜெயக்குமார் காரணமும் சொல்லி இருந்தார். இப்போதும், பொங்கல் சமயத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் 1000 ரூபாய் அன்பளிப்பில் குளிர வைக்க திட்டம் உள்ளதாம்.

    அதிமுக

    அதிமுக

    இந்த நேரத்தில் தேர்தலும் வந்தால் அது கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என்பது அதிமுகவின் யோசனையாக உள்ளதாம். தற்போது வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறி கோர்ட்டில் கூறியுள்ளது தமிழக அரசு. பொங்கலையொட்டி தேர்தலை நடத்தும் திட்டத்தை மனதில் வைத்தே இப்படிச் சொல்லியுள்ளதாக ஒரு பேச்சு கோட்டை வட்டாரத்தில் அடிபடுகிறது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    அதேசமயம், டிசம்பர் மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், டிசம்பர் 30க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எப்படியோ, தமிழக மக்களுக்கு வர போகும் பொங்கலும் மகிழ்ச்சியாகத்தான் பொங்க போகிறது போலும்!

    English summary
    The AIADMK seems to be planning the local body elections ahead of the Pongal festival
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X