சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்?

தேனி பார்முலாவை அதிமுக இந்த முறை கையில் எடுக்கும் என தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் | Nanguneri By Election

    சென்னை: வேற வழியே இல்லை.. இந்த இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. அக்கட்சிக்கு பெரிய அளவில் கை கொடுத்த தேனி பார்முலாவை சட்டசபை இடைத் தேர்தலிலும் அதிமுக பயன்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

    ஒவ்வொரு தேர்தல் சமயத்தின்போதும் ஒரு பார்முலா ஒர்க் அவுட் ஆகும். இதில் ரொம்பவும் பிரபலமானது முக அழகிரியின் திருமங்கலம் பார்முலாதான். இதை அடிப்படையாக வைத்துத்தான் இன்று அதிமுக, திமுக மாறி மாறி கரையேறிக் கொண்டிருக்கின்றன.

    அழகிரி அன்று வகுத்த வியூகத்துக்கு கை மேல் பலன் கிடைத்ததுடன், இன்றுவரை அழகிரியும் பேசப்படும் அளவுக்கு புகழ்பெற்றதுதான் இந்த திருமங்கலம் ஃபார்முலா. இதன்பிறகு அதிகம் பேசப்பட்டது "தேனி ஃபார்முலா".. அதென்ன தேனி ஃபார்முலா?

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்

    திமுக டஃப்

    திமுக டஃப்

    லோக்சபா தேர்தலின்போது அத்தனை தொகுதிகளிலும் அதிமுக மண்ணைக் கவ்வியபோது தேனிதான் அதற்கு ஆறுதல் கொடுத்தது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் ஜெயலலிதா மறைந்ததும் அதிமுக சந்தித்த முதல் தேர்தல். ஒரு பக்கம் திமுக டஃப் கொடுக்க.. திணறவே செய்தது அதிமுக. கூடவே நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் திடீர் எழுச்சி அதிமுக, திமுக கூட்டணிகளை தடுமாற செய்தன.

    கரன்சி

    கரன்சி

    ஆட்சி கையில் உள்ளதால், ஒரு சில வேளைகளில் அதிமுகவால் எளிதில் கையாள முடிந்தது. உளவுத்துறையின் ரிப்போர்ட்டின் மூலம் கள நிலவரத்தை பெற முடிந்ததுடன், அதில் அதிமுகவுக்கு சரிவு சந்திக்க வாய்ப்பு என்பதையும் அறிந்து ஆடிப்போனதாகவும், அதை சரிக்கட்டவே கரன்சியை கையில் எடுத்ததாகவும் செய்திகள் வந்தன. தங்க தமிழ்செல்வன் தனது பிரச்சாரத்தில்கூட, "தேனி தெருக்களில் பண மழை கொட்டுகிறது" என்றார். தேனியில் கரன்சி மழை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டினை வைத்திருந்தார்.

    ஓபி ரவீந்திரநாத்

    ஓபி ரவீந்திரநாத்

    "தாராளங்கள்" தொகுதிக்குள் காட்டப்பட்டதாகவும் தகவல்களும் கசிந்தன... இதை அதிமுக பொருட்படுத்தவே இல்லை. குறிப்பாக அதன் வேட்பாளர் ஓபி ரவீந்திரநாத் விடாமல் தனது பிரச்சாரத்தை முடுக்கி விட்டார். கிராம் கிராமமாக போனார்.. வியர்க்க விறுவிறுக்க பிரச்சாரத்தை முடுக்கி விட்டார். இறுதியில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டது. மற்ற தொகுதிகளில் மண்ணை கவ்வினாலும், தேனியில் மட்டும் வெற்றி பெற ஓபி ரவீந்திரநாத் போட்ட செமத்தியான பிளான்தான் காரணமாக அமைந்ததாக சொல்லப்பட்டது.

    2 தொகுதிகள்

    2 தொகுதிகள்

    இதோ இப்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இந்த 2 இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாங்குநேரி என்பது காங்கிரசின் மண் என்று சொல்லப்படுவது. திமுகவே இன்று அந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது என்றால், அங்கு அதிமுக தன் பலத்தை நிரூபிக்க வழி இருக்குமா என தெரியவில்லை.

    பூத் கமிட்டி

    பூத் கமிட்டி

    அதேபோல விக்கிரவாண்டியை எடுத்து கொண்டால், திமுக எம்எல்ஏ இறந்தபோதே, அதிமுக வியூகம் அமைக்க தொடங்கிவிட்டதாம். குறிப்பாக, சிவி சண்முகம்தான் மாவட்ட நிர்வாகிகள் முதல் பூத் கமிட்டி வரை 'கவனித்து' வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. திமுக இங்கு பலமாக இருந்து வரும் நிலையில், இப்போது அதிமுக வேறு வழியில்லாமல், அதே தேனி ஃபார்முலாவை இங்கேயும் இறக்க வேண்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஓபிஆர்

    ஓபிஆர்

    மொத்தத்தில் அதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் பலம் அதிகரிக்க வேண்டிய நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டையும் அள்ள தேனி ஸ்டைல் பார்முலாவை களம் இறக்கலாம்.. ஏன் ஓபி ரவீந்திரநாத் குமாரின் உதவியையும் கூட அதிமுக நாடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பார்க்கலாம்.. மொத்தத்தில் பரபரக்கப் போகிறது இரு தொகுதி தேர்தல் களம்.

    English summary
    DMK is strong in both Vikkiravandi and Nanguneri. Reports say that AIADMK will take over the Theni formula in by elections also
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X