சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டைய கிளப்பும் அதிமுக.. துவம்சம் செய்யும் திமுக... ஒரே நாளில் சூடான தமிழகம்.. தண்ணீருக்காக!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, வெறும் ஒரு ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்ணீர் பிரச்சனையை கண்டித்து ... தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

    சென்னை: திமுக, அதிமுக இரு கட்சிகள் இன்று ஒரே நாளில் தமிழகத்தை பரபரப்பு களங்களாக மாற்றி பட்டையை கிளப்பி வருகின்றனர். மந்திரங்கள், வேதங்கள் ஒரு பக்கம் முழங்க... கண்டன முழக்கங்களும் இன்னொரு பக்கம் முழங்கி சூடாக்கி விட்டன.

    தண்ணீர் பஞ்சம் சொல்ல முடியா அளவுக்கு போய்விட்டது. இப்படி ஒரு பஞ்சம் வரும் என்று கடந்த நவம்பர் மாதமே வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர்.

    ஆனாலும் அரசு சுதாரிக்க தவறிவிட்டது. இதை திமுக தலைவர் அடிக்கடி சொல்லி வந்தாலும், மக்களும் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து அவதியில் உள்ளனர்.

    புகைக்சல்

    புகைக்சல்

    இதனால் குடிநீர் பிரச்சனையை திமுக இன்னும் தீவிரமாக கையில் எடுத்தது. ஒரு மாதமாகவே குடிநீர் விநியோகம் இக்கட்சி சார்பில் நடந்து வருவது அதிமுக தரப்புக்கு லைட்-டாக புகைச்சலை தந்ததாக சொல்லப்படுகிறது.

    வதந்திதான்

    வதந்திதான்

    இதுதவிர, "தண்ணி பஞ்சமெல்லாம் ஒன்னும் இல்லை.. எல்லாம் மாயை.. மீடியாக்கள் ஊதி பெரிசாக்குகின்றன" என்று அமைச்சர் பெருமக்கள் சொன்னார்கள். மேலும் கேரளா தர வந்த தண்ணியையும் வேண்டாம் என்று சொன்னதாக ஒரு வதந்தி கிளம்பியது. இது எல்லாவற்றையும் ஸ்டாலின் தனக்கு சாதகமாக மாற்ற முடிவு செய்தார். அதன்படி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணாத அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் என அறிவித்தார்.

    கடுப்பு

    கடுப்பு

    இது மேலும் அதிமுகவுக்கு கடுப்பை ஏற்றியது. இப்படி ஒரு போராட்டம் தமிழகத்தில் வெடித்தால், அது அரசுக்கு மேலும் கறையை தந்துவிடும் என்பதை உணர்ந்து, இன்றைய தினம் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் யாகம் நடத்தி சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது திமுகவின் போராட்டத்தை திசை திருப்பவும், அம்மா வழியில் ஆட்சி என்பதை நிரூபிக்கவும் இந்த யாகம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பூஜைகள்

    பூஜைகள்

    அதன்படி அமைச்சர்கள் ஆளுக்கொரு மாவட்டத்தின் பிரதான கோயிலுக்குள் சென்று பூஜையில் உட்கார்ந்துவிட்டார்கள். திமுக தரப்பிலோ, மாவட்டத்திற்கு ஒரு நிர்வாகி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.

    பிரயோஜனம் இருக்கா?

    பிரயோஜனம் இருக்கா?

    இப்படி யாகம் செய்தால் மழை வருமா என்று திமுகவினர் ஒரு பக்கம் கேள்வி எழுப்ப.. வருண பகவானிடம் கோரிக்கை வைத்து அதிமுக காத்திருக்கிறது. இன்று இரு கட்சிகளும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் இப்படி ஆர்ப்பாட்ட முழக்கமும், மந்திர முழக்கமும் தமிழகத்தில் எதிரொலித்து கிடுகிடுக்க வைத்தது. ஆனால் இங்கு யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.. இந்த இரு கட்சிகளும் இன்று நடத்திய போராட்டத்தாலும், யாகத்தாலும் கிஞ்சித்தும் மக்களுக்கு பிரயோஜனம் உண்டா என்பதுதான் அது.

    யாரும் விரும்பவில்லை

    யாரும் விரும்பவில்லை

    தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க என்னவெல்லாம் வழி உண்டோ அதில் திமுக தீவிரமாக இறங்கியிருக்கலாம். போராட்டங்கள் கணக்கு காட்டவே பயன்படுமே தவிர வேறு எதற்குமே அது பயன் தராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே திமுக வெற்று ஆர்ப்பாட்டத்தைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல யாகம் நடத்தி பணம், நேரத்தை விரயம் செய்வதற்குப் பதில் எங்கிருந்தெல்லாம் தண்ணீரைக் கொண்டு வர முடியுமோ அதில் அதிமுக கவனம் செலுத்தலாம். மேலும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் தொகுதியிலேயே முகாமிட்டு மக்களுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்யலாம். அமைச்சர்கள் இதில் முன்னிலை வகிக்கலாம்.

    தேவையா?

    தேவையா?

    இதெல்லாம்தான் மக்கள் எதிர்பார்ப்பு தவிர போராட்டம், யாகம், பூஜையையெல்லாம் மக்கள் விரும்பவில்லை, விரும்பவும் மாட்டார்கள்.. இரு கட்சிகளும் புரிந்து கொள்வார்களா!

    English summary
    AIADMK is doing special poojas in the temples against the DMKs Struggle throughout Tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X