சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி "இதை" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலமைப்பையும் கல்வியையும் பகத்சிங், அம்பேத்கர் வழியில் நின்று பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களுக்கு இருக்கிறது என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும் என ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைவருக்குமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். கல்வியியல் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Aishe Ghosh says Rajinikanth should understand the students

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஆய்ஷி கோஷ் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கல்வி உரிமைகளை நசுக்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து போராட எல்லா உரிமையும் எங்களுக்கு உண்டு.

கல்வி என்பது விற்கப்படும் வியாபார பண்டம் அல்ல, அது ஒவ்வொருவருடைய உரிமையாகும். மாணவர்களாகிய நாங்கள் இந்த சமூகத்தில் வளர்ந்து வரும் நிலையில் பிரிட்டிஷ்காரர்களிடம் இந்தியா அடிமைப்பட்டு இருந்ததை போல் நாங்கள் அடிமையாக இருப்பதற்கு விரும்பவில்லை.

சாவர்க்கர், கோல்வாக்கர் வழித்தோன்றல்கள் கூடிய தேசியத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்றார். அப்போது மாணவர்கள் தேவையற்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என ரஜினிகாந்த் கூறியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

திமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்திமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்

அதற்கு அவர் அரசியலமைப்பையும் கல்வியையும் பகத்சிங், அம்பேத்கர் வழி நின்று பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களாகிய எங்களுக்கு உண்டு என்பதை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டி அளித்த போது சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை சிலர் தூண்டி விட்டுள்ளனர். மாணவர்கள் எல்லாவற்றையும் யோசித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ரஜினி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
JNU Student Union President Aishe Ghosh says Rajinikanth should understand that we have to protest Constitution and Education in Bhagat Singh and Ambedkar path.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X