சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. உலக கோப்பை போட்டியை மிஞ்சிய அஜித் புகழ்.. டிவிட்டரில் வருடம் முழுக்க ஒரே கிங்!

Google Oneindia Tamil News

சென்னை: 2019ம் வருடத்தில் டிவிட்டரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய முதல் ஐந்து டிவிட்டர் டேக்குகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் விஸ்வாசம் படத்தின் #Viswasam டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள். எல்லா விஷயத்தையும் தமிழர்கள் மிக எளிதாக உலக அளவில் டிரெண்ட் செய்கிறார்கள். கோ பேக் மோடி (#GoBackModi) டேக்கை போன்ற சீரியசான விஷயங்களாக இருந்தாலும் சரி, சேவ் நேசமணி #SaveNesamani போன்ற காமெடியான விஷயமாக இருந்தாலும் சரி தமிழர்கள்தான் தற்போது இணையத்தில் கிங்.

இந்த வருடம் முழுக்க தமிழர்கள்தான் இணையத்தில் முக்கிய விஷயங்களை இந்தியாவில் தீர்மானம் செய்துள்ளனர். இந்த வருட டிரெண்ட் எப்படி இருந்தது என்பதே அதற்கு சிறந்த உதாரணம் .

தீபாவளி

தீபாவளி

இந்த வருடம் டிவிட்டரில் டிரெண்ட் ஆன டேக்குகளில் ஐந்தாவது இடத்தை #HappyDiwali டேக் பிடித்துள்ளது. கடந்த மாதம்தான் தீபாவளி முடிந்தது. அப்போது இந்த #HappyDiwali டேக்கில் பலர் டிவிட் செய்தனர். இதனால் இந்த டேக் இந்த வருடம் பாதிப்பை ஏற்படுத்திய டேக்குகளில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்

மகாராஷ்டிரா தேர்தல்

அதேபோல் கடைசி நேரத்தில் மகாராஷ்டிரா அரசியல் பெரிய அளவில் பிரச்சனையானது. அங்கு தேர்தல் முடிந்து மூன்று வாரம் ஆகியும் இன்னும் அரசு அமையவில்லை. சிவசேனா பாஜக இடையிலான சண்டை அங்கு பெரிய அளவில் பூதகரமாகி உள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் பலர் டிவிட் செய்தனர். இதனால் மகாராஷ்டிரா #Maharashtra என்று டேக் 4வது இடத்தை பிடித்துள்ளது.

கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி

இந்த வருடம் அதிக கவனத்திற்கு உள்ளான இன்னொரு விஷயம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான். இதில் கடைசியில் இங்கிலாந்து அந்த திரில்லாக பவுண்டரி அடிப்படையில் வென்றது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டி டை ஆக, பின் சூப்பர் ஓவரும் டை ஆக, மொத்தமாக இறுதிப்போட்டி பெரிய விறுவிறுப்புடன் முடிந்தது.

வைரல்

வைரல்

அதேபோல் இந்தியா நியூசிலாந்து விளையாடிய செமி பைனல் போட்டியும் கடைசி வரை திரில்லாக சென்றது. தோனி ஜடேஜா அதிரடியால் இந்த போட்டி செம வைரல் ஆனது. இதற்கான அதிகாரபூர்வ டேக்கான #cwc19 எனப்படும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 டேக் 3 பெரிய டேக்காக வைரலாகி உள்ளது.

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல்

இந்த டிரெண்டில் இரண்டாவது இடத்தில் லோக்சபா தேர்தல் உள்ளது. இந்த வருடம்தான் லோக்சபா தேர்தல் நடந்து பாஜக மீண்டும் பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை அமைத்தது. இதற்காக ஒரு மாதம் தேர்தல் நடந்தது. பிரதமர் மோடி 100 பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு சாதனை படைத்தார்.

இரண்டு மாதம்

இரண்டு மாதம்

இதற்காக #LokSabhaElections2019 என்று டேக் உருவாக்கப்பட்டது. இரண்டு மாதமாக பலர் இதில் டிவிட் செய்து வந்தனர். இதனால் இந்த வருடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய டேக்குகளில் #LokSabhaElections2019 டேக் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அஜித் படம்

அஜித் படம்

ஆனால் யாருமே எதிர்பார்க்காமல் கோலிவுட் நடிகர் அஜித் நடித்த விசுவாசம் படத்தின் #Viswasam டேக் இணையம் முழுக்க பெரிய அளவில் டிரெண்டானது. இந்த வருடம் முழுக்க இந்த டேக் கீழ்தான் அதிக டிவிட்டுகள் போடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேக் அதிக முறை தேசிய அளவில் டிரெண்டாகி இருக்கிறது.

அவர்தான் கிங்

அவர்தான் கிங்

வருடம் முழுக்க இதில் பல விவாதங்கள் நடந்துள்ளது. இதனால் காரணமாக இந்த வருடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய டிவிட்டர் டேக்காக #Viswasam டேக் மாறியுள்ளது.

English summary
Ajith Kumar's Viswasam ruled Twitter in 2019: Becomes Number 1 tag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X