சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்!

நடிகர் தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம், அரசியலுக்கு வந்தால் அவர் முன்னோடியாக இருப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம், அரசியலுக்கு வந்தால் அவர் முன்னோடியாக இருப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அதிமுக கட்சியினருக்கு இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்று கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார் என்று நேற்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினியின் அரசியல் வருகை குறித்து தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி!கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி!

ரஜினி எப்படி

ரஜினி எப்படி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பேட்டியில், நாளை என்ன நடக்கும் என்று கடவுளுக்குத்தான் தெரியும். நடிகர் ரஜினி ஒரு ஆன்மிகவாதி. அவர் சொல்வது போன்று நாளை என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. ரஜினி முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.

நேரம் ஆகிவிட்டது

நேரம் ஆகிவிட்டது

பாட்ஷா திரைப்படம் வெளியானபோது கட்சி ஆரம்பித்திருந்தால் ரஜினி ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் இப்போது வாய்ப்பு இல்லை. அவர் மிகவும் லேட்டாக வந்துவிட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. அவரால் பிரச்சாரம் செய்ய முடியுமா என்றே தெரியவில்லை.

அஜித் அரசியல்

அஜித் அரசியல்

ஏன் அஜித் அரசியலுக்கு வர மாட்டாரா? தல அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக திகழ மாட்டாரா? திரை உலகின் அதிசய நாயகன் தல அரசியலுக்கு வர கூடாதா? நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

தெரியும்

தெரியும்

ரஜினி, கமல், விஜய் ஆகியோர் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கட்சி பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்கும். அரசியலில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

English summary
Ajith may come to politics too says Minister Rajendra Balaji replies to Actor Rajinikanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X