சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

அஜித் வெளியிட்ட அறிக்கையின் பின்னணி என்னவாக இருக்கும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajith political entry | 'தெளிவாக இருக்கிறேன்' : அரசியல் பிரவேசத்தை பற்றி அஜித்

    சென்னை: ஹேட்ஸ் ஆப் அஜித்!! என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் ரசிகர்களுக்கு என்று அவர் வெளியிட்ட அறிக்கை மற்றவர்களுக்கு பல தகவல்களை சொல்லி தந்துவிட்டு போயிருக்கிறது.

    2010-ம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி இருந்த சமயம்.. பாசத்தலைவனுக்கு பாராட்டு என்ற பெயரில் சினிமா கலைஞர்கள் விழா எடுத்தார்கள். அப்போது மேடையில் பேசிய அஜித், "ஐயா.. நீங்க எவ்ளோ பிரச்சனைகளை சால்வ் பண்ணியிருக்கீங்க.

    இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டிக்கல் இஷ்யூஸ்ல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க ப்ளீஸ்.. கெஞ்சி கேட்டுக்கறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப இன்டஸ்ட்ரில பொறுப்புல இருக்கிற ஒருசிலர் எங்களை எப்படியாவது கலந்துக்க வைக்கறாங்க.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    அதனால்தான் நாங்க வர்றோம். சினிமா இன்டஸ்ட்ரி ஒரு பொதுவான இன்டஸ்ட்ரியா இருக்கும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க அய்யா... வி ஆர் டயர்ட்" என்றார். இதை பேசி முடித்ததும் முதல் ஆளாக எழுந்து நின்று கைதட்டியது ரஜினிகாந்த்தான்.

    துணிச்சல்

    துணிச்சல்

    அஜித் இப்படி பேசியது கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை தந்ததாக சொல்லப்பட்டாலும், அஜித்தின் துணிச்சலும், தன் கருத்தை வெளிப்படையாக சொல்ல அவர் தயங்கியதே இல்லை என்பதற்கும் உதாரணம்தான் இந்த சம்பவம். இவ்வளவு தைரியம் வாய்ந்த அஜித், நேற்று ஒரு அறிக்கையை வெளியிட என்ன காரணமாக இருக்கும்? 2 காரணங்கள்தான் இருக்க முடியும். முதல் காரணம், தமிழிசையின் திருப்பூர் மேடைப்பேச்சுதான்.

     மானாவாரியான புகழ்ச்சி

    மானாவாரியான புகழ்ச்சி

    அஜித்தை வைத்து விஜய்யை பழி வாங்க பாஜக திட்டம் தீட்டியதா? அல்லது ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க அஜித் ரசிகர்களை வைத்து காய் நகர்த்த திட்டம் தீட்டியதா? அல்லது உண்மையிலேயே அஜித் தன் பக்கம் இருந்தால் கட்சியின் மீது நல்ல பிம்பம் விழும் என்று நினைத்து திட்டம் தீட்டியதா என தெரியவில்லை. ஆனால் அஜித்தை மானாவாரியாக புகழ்ந்து தள்ள போய்.. கடைசியில் அஜித் இப்படி ஒரு அறிக்கையை விட்டு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டார் தமிழிசை.

     வசூல் போட்டி

    வசூல் போட்டி

    மற்றொன்று பேட்ட, விஸ்வாசம் படம் ரிலீசானதில் இருந்தே எந்த படம் நன்றாக ஓடுகிறது? எந்த படம் முதலில் வசூலை அள்ளுகிறது என்று போட்டா போட்டிகள் இருந்தன. 10 நாளில் 100 கோடி வசூல் என பேட்ட படமும், 125 கோடி வசூல் என விஸ்வாசம் படமும் மாறி மாறி பேட்டி அளித்தன. இதனால் ரஜினி ரசிகர்கள் கொதிப்பிலேயே இருந்தனர். இதை தவிர அஜித் ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கலாட்டா, படுகாயம், உயிரிழப்பு, கொலை முயற்சி என தொடர் வன்முறையிலும் ஈடுபட்டு வந்தனர்.

     ரசிகர்கள் சந்திப்பு

    ரசிகர்கள் சந்திப்பு

    இதனால் இவர்கள் மீது தவறான கண்ணோட்டமும் கடந்த 10 நாட்களாக எழுந்து வருகிறது. இதை அடக்கும் விதத்திலும்தான் அந்த அறிக்கை இருந்தது. வரிக்கு வரி என் ரசிகர்கள் என் ரசிகர்கள் என்று விட்டுக் கொடுக்காமலும், அதே சமயம், சமூக கண்ணோட்டத்தை ஊட்டும் விதத்திலும் நாசூக்காக தன் கருத்தை வெளிப்படுத்தினார் அஜித். பொதுவாக ரசிகர்களிடத்தில் ஒதுங்கியே இருப்பவர் அஜித். மாவட்டந்தோறும் ரசிகர்களை சந்திப்பது, பொதுவிழாக்களில் கலந்து கொள்வது, என ஒரு சராசரி நடிகனிலிருந்து வேறுபட்டவர்.

    மதிப்பவர்

    மதிப்பவர்

    ஆனால் ரசிகர்கள் ஆர்வமாக போட்டோ, செல்பி எடுத்துகொள்ள முயலும்போது அந்த உணர்வை மதித்து நடப்பவர். தெரிந்தும், தெரியாமலும் எத்தனையோ பேருக்கு உதவிகளை அள்ளி அள்ளி செய்பவர். ஆனால் அரசியலுக்கு வரக்கூடாது என்பதிலும், தன்னிடமுள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தொண்டர்களாக மாற்றிவிடகூடாது என்பதிலும் உறுதியாக இருப்பவர். இதற்கு காரணம், மலையாள உலகில் மம்முட்டி, மோகன்லால் போன்று பலர் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருப்பதைபோல் அஜித் நினைக்கலாம்.

     பாடமாக இருக்கும்

    பாடமாக இருக்கும்

    அல்லது ஏற்கனவே அரசியலுக்கு வந்த சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், விஜயகாந்த், நெப்போலியன், ரஜினி போன்றோரின் தோல்வி முகத்தை பார்த்துகூட அரசியலே வேண்டாம் என்றும் முடிவெடுத்திருக்கலாம். ஆனால் எம்ஜிஆரை தவிர இதுவரை அரசியலுக்கு வந்து பல்பு வாங்கியவர்களுக்கும், இனி வாங்க போகிறவர்களுக்கும், அஜித்தின் இந்த அறிக்கை ஒரு பாடமாக இருக்கும்!!

    "தலை" சிறந்த உதாரணம்

    பஞ்ச் வசனங்களே இல்லாமல் எண்ணற்ற ரசிகர்களை பெறலாம் என்பதற்கும், மனிதநேயம் மிக்க உள்ளம் இருந்தால் அரசியல்வாதிகளை விட மக்கள் மனதில் என்றும் வாழலாம் என்பதற்கும் அஜித் ஒரு "தலை"சிறந்த உதாரணம்!! ஹேட்ஸ் ஆப் அஜித்!

    English summary
    Ajith's statement will be a lesson for today's politicians and his value rises through it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X