சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூகுள் மேப்பால் தவறுதலாக வழிமாறி வந்த அஜீத்.. போலீஸ் கமிஷ்னர் ஆபிஸில் என்ன நடந்தது!

Google Oneindia Tamil News

சென்னை: கூகுள் மேப்பில் கால் டாக்ஸி டிரைவர் தவறுலாக கமிஷ்னர் ஆபிஸ் என்று வேப்பரி அலுவலகத்தை பதிவு செய்தததால் அங்கு கொண்டு போய் அஜித்தை இறங்கிவிட்டுள்ளார்.

ஆனால் சென்ற பின்னர் தான் தெரிந்துள்ளது அவர் போக வேண்டிய இடம் பழைய கமிஷ்னர் ஆபிஸ் அலுவலகம் அருகே என்பது. இந்த விவகாரத்தில் பலரும் கூகுளை விமர்சித்தும் கலாய்த்தும் வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் கால்டாக்ஸி டிரைவர் தான் தவறுதலாக இடத்தை மாற்றி பதிவு செய்தார் என்பது பலருக்கும் தெரியவில்லை என்கிறார்கள் அஜித் ரசிகர்கள். என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

அஜித் புறப்பட்டார்

அஜித் புறப்பட்டார்

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பில் உறுப்பினராக உள்ள அஜித் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகிறார். அங்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலை வீட்டில் இருந்து கால்டாக்சியில் வியாழக்கிழமை காலை அஜித் கிளம்பி உள்ளார்.

வேப்பரி வந்தார் அஜீத்

வேப்பரி வந்தார் அஜீத்

அப்போது கால் டாக்ஸி டிரைவர் கமிஷ்னர் ஆபிஸ் என்ற உடன் புதிய கமிஷ்னர் ஆபிஸ் அலுவலக முகவரியை தேர்வு செய்து கூகுள் மேப் மூலம் வாகனத்தை இயங்கி உள்ளார். அன்படி கூகுள் மேப் மூலம் இடம் மாறி வேப்பேரி புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அஜீத் வந்துள்ளார்.

அஜித் வந்தார்

அஜித் வந்தார்

அஜித் அரைக்கால் சட்டையுடன் முகக்கவசம் அணிந்தவாறு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அரைக்கால் சட்டையுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முகக்கவசத்தை கழற்றியதும் அவரை போலீசார் அடையாளம் கண்டுகொண்டார்கள்.

அஜித் உடன் செல்பி

அஜித் உடன் செல்பி

இதையடுத்து போலீசார் மற்றும் புகார் அளிக்க வந்திருந்த பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் உற்சாகத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர் இதனால் சென்னை காவல் ஆணையர் அலுலக வளாகத்திற்குள் கூட்டம் கூடத்தொடங்கியது, அப்போது பணியில் இருந்த போலீசார் அஜித்திடம் வழி மாறி வந்ததை போலீசார் எடுத்துக்கூறியதை அடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
What happened in the chennai Police Commissioner's Office , how Ajith was misguided on google map by driving call taxi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X