சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபைக்கு தேர்தல் வந்தால் எல்லாருமே பயங்கரமாக மண்ணை கவ்வுவார்கள் போலயே!

சொந்த தொகுதிகளில் கூட தமிழக அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: இப்போதான் ஒரு சீக்ரெட் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது... அது நம்மை ஆளும் தமிழக அமைச்சர்களை பற்றிய நிலவரமும், அவர்களின் செல்வாக்கும்தான்!

ஜெயலலிதா இறந்தவுடன், இப்போது பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் நம் கண்ணுக்கு கெத்தாக தெரிந்தார்கள். ஆட்சிக்காகவும், கட்சிக்காகவும் ஜெயலலிதா நம்பி விட்டு போன முக்கியஸ்தர்கள் என்றும் தமிழக மக்களால் நம்பப்பட்டார்கள்.

இதற்கு காரணம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், செங்கோட்டையன், ஜெயக்குமார் என்ற மூத்த, முக்கிய, பலமான நபர்கள்தான். எப்படியாவது இவர்கள் கட்சி, ஆட்சியை மரியாதை குலையாமல், செல்வாக்கை இழக்காமல் பயணத்தை கொண்டு போவார்கள் என்றுதான் அதிகம் நம்பப்பட்டது.

கடும் வறட்சியால் வறண்ட அணைகள்.. அடியோடு சரிந்த நீர் மின் உற்பத்தி.. மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் கடும் வறட்சியால் வறண்ட அணைகள்.. அடியோடு சரிந்த நீர் மின் உற்பத்தி.. மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 சர்ச்சைகள்

சர்ச்சைகள்

அதேபோல, செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் இவர்கள் மேல் எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே ஒருவித பிடிப்பும் இல்லை, அவர்களின் வார்த்தைகளில் முதிர்ச்சியும் தென்படவில்லை.

நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தம்

எப்படியும் உள்ளாட்சிதேர்தல், இடைத்தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை முடித்துவிடலாம் என்று நினைத்தார்களோ என்னவோ, தள்ளி போட்டு கொண்டே போனார்கள். ஒருகட்டத்தில் எம்பி தேர்தல் அனைவரையும் இழுத்து பிடித்து தேர்தலில் போட்டியிட வைத்துவிட்டது. இதன்கூடவே மற்ற இடைத்தேர்தல்களையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

மண்ணை கவ்வினர்

மண்ணை கவ்வினர்

கடைசியில் 2 வருட ஆட்சியின் பலனும் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர்களும், எதிர்பார்க்காத அமைச்சர்களும் சரி.. மொத்தமாகவே மண்ணை கவ்வி நமக்கு அதிர்ச்சியை தந்துள்ளார்கள். ஒருத்தரும், ஒரு தொகுதியிலும் குறிப்பிட்ட வாக்கைகூட பெறவில்லை!

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

சட்டசபை தொகுதிகளில் கிடைத்த ஓட்டுகள் எல்லாமே இந்த அமைச்சர்களுக்காக விழுந்தவை இல்லை. அவை நாடாளுமன்ற வேட்பாளர்களுக்காகவே விழுந்த ஓட்டுக்கள்தான். ஒட்டுமொத்த தமிழகத்துக்காக இல்லை என்றாலும், துறை வாரியாக கூட இல்லை என்றாலும், குறைந்தபட்சம் தங்கள் ஓரளவுக்கு ஏதாவது செய்து செல்வாக்கை வைத்திருப்பார்கள் அமைச்சர்கள். இதுதான் வழக்கம். ஆனால் இதுகூட இந்த முறை இல்லாமல் போய்விட்டதுதான் பரிதாபம்.

திமுக ஓட்டுகள்

திமுக ஓட்டுகள்

எல்லா அமைச்சர்களுமே அதாவது 30 அமைச்சர்களுமே போன முறை அவர்களது தொகுதிகளில் பெற்ற ஓட்டை கூட இந்த முறை வாங்கவில்லை. அதிலும் மாநில முதல்வரின் தொகுதி நிலைமையோ ரொம்ப மோசம். அதிமுக கூட்டணி வாங்கிய வாக்குகள் 96,485 என்றால், திமுக கூட்டணி பெற்ற ஓட்டுகள் 1,04,573 ஆகும். அதாவது, 8,088 வாக்குகள் அதிகம் உள்ளது. இன்னொரு பரிதாபமான மோசமான நிலை என்னவென்றால், இப்படி எல்லாரையும்விட ரொம்ப குறைவான வாக்குகளை பெற்றதில் முதலிடத்தில் இருப்பது எடப்பாடியார்தானாம்!

அங்கீகாரம்

அங்கீகாரம்

தேமுதிக, பாஜக, தமாகா போன்ற கட்சிகள் பேசாமல் தனியாகவே நின்றிருந்தால்கூட ஓரளவு வாக்குகளை வாங்கி இருக்கும்போல தெரிகிறது. ஏனென்றால், இவைகள் எல்லாம் சென்றமுறை பெற்ற வாக்குகளைகூட இந்த முறை கூட்டணி வைத்து வாங்கவில்லை என்பதுடன், மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளது.. இதில் ஒருசிலரது கட்சியின் அங்கீகாரமே காணாமல் போய் விட்டது அதை விடக் கொடுமை.

English summary
CM Edapadi Palanisamy and Ministers lost victory in their own constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X