சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"எல்லாம் பொய்".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்!

இந்து முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "ஒற்றுமையுடன் திகழும் இந்து சமுதாயத்தில், திமுக அரசு குழப்பத்தை விளைவிக்கக்கூடாது.. பிராமணராக இருந்தால் கூட, உரிய தகுதிகள் இல்லாவிட்டால் கோவில்களில் பூஜை செய்ய முடியாது" என்று இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டில், தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் ஆணையை பிறப்பித்திருந்தது.. இதையடுத்து, அனைத்து சாதியினருக்கும் கோயில் அர்ச்சகர் ஆவதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் டிரெய்னிங் தரப்பட்டது.. இதற்கான பாடசாலைகளும் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட 206 பேர் பயிற்சியும் பெற்றனர்.

ஆனாலும் இந்த உத்தரவினை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டன.. அதன்படி, படித்து முடித்த மாணவர்கள் அர்ச்சகர் ஆகமுடியாத நிலைமை ஏற்பட்டது.. 2015ல் வழக்குகள் முடிந்து அரசு ஆணை செல்லும் என்று உத்தரவு வந்தாலும், பயிற்சி பெற்றவர்களுக்கு பணி இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது..

உங்களை பார்த்தாலே தெறித்து ஓடும் முன்னணி நடிகைகள்.. விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் புகார் உங்களை பார்த்தாலே தெறித்து ஓடும் முன்னணி நடிகைகள்.. விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் புகார்

சுப்ரீம்கோர்ட்

சுப்ரீம்கோர்ட்

தமிழக அரசு ஆணையிட்டும், அந்த ஆணை நியாயமானது என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்ட பின்னரும் கூட, பிராமணர் அல்லாத பிற சாதியினரை அர்ச்சகர் ஆகாமல் இருப்பதாகவும், பயற்சி முடித்த 204 பேருக்கும் அரசு பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளும் மறுபுறம் எழுந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, அர்ச்சகர் என்பது அரசுப்பணியாக இருந்தாலும், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன், போன்ற முக்கிய கோயில்களில் பணி நியமனம் என்பது ரகசியமாகவே இருப்பதாகவும் இன்னொரு பக்கம் புலம்பல்கள் எழுந்தன.

 புலம்பல்கள்

புலம்பல்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகம் ஆகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம் என்றும் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

சந்தேகம்

சந்தேகம்

இதனை பல தரப்பினர் மனம்திறந்து பாராட்டி வருகின்றனர்.. அந்த வகையில், இந்து முன்னணியும் வரவேற்றுள்ளது.. அதேசமயம், அத்திட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம் என்று சொல்வது பக்தர்களிடம் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிவிப்பு

அறிவிப்பு

அந்த அறிக்கையில், "அர்ச்சகர்கள், கோவிலில் பூஜை செய்பவர்கள் என்றாலே அந்தணர்கள் என்ற பொய் பிரசாரத்தை திராவிட கட்சிகள் செய்து வருகின்றன... அதன் நீட்சி தான் இந்த அறிவிப்பு... அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். ஒருவர் அர்ச்சகராக தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்றால் ஆகம விதிகளை படிக்க வேண்டும்..

குழப்பம்

குழப்பம்

7 ஆண்டு பயிற்சி பெற வேண்டும். பிறகு தான் பூஜை செய்ய முடியும்... பிராமணராக இருந்தால் கூட இத்தகுதிகள் இல்லாவிட்டால் கோவில்களில் பூஜை செய்ய முடியாது... ஒற்றுமையுடன் திகழும் இந்து சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிக்கக்கூடாது.. இதுபோன்ற திட்டங்களை அறிவிக்கும் முன் ஆன்மீகப்பெரியோர், மடாதிபதிகள் மற்றும் சமுதாய அமைப்பினரின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
All castes will be priests in 100 days: Hindu Front insists to TN Gov about
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X