சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் அனைத்து அரசு வேலைகளும் தமிழர்களுக்கே.. சட்டம் போடுங்க.. ராமதாஸ் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைகளையும் தமிழக மக்களுக்கே வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மத்திய பிரதேசத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை சுட்டிக்காட்டி ராமதாஸ் இந்த கோரிக்கையை எழுப்பி உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநிலத்தைச் சேரந்த இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்கான சட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். மத்திய பிரதேச வளங்கள் அனைத்தும் அம்மாநில மக்களுக்கானவை என்றும் சிவராஜ்சிங் சவுகான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

All government jobs in Tamil Nadu should be provided to the people of Tamil Nadu: Ramadoss

இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைகளையும் தமிழக மக்களுக்கே வழங்க வேண்டும் என்றும் இதற்கான தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

All government jobs in Tamil Nadu should be provided to the people of Tamil Nadu: Ramadoss

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "மத்திய பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!" இவ்வாறு கூறியுள்ளார்.

Recommended Video

    Kaduvetti Guru VS PMK | பாமகவுக்கு எதிரான அஸ்திரம் | Kaduvetti Guru Movie பின்னணி

    கணபதி பாப்பா மோரியா.. 11 அங்குல உயரத்தில் கியூட்டான நர்த்தன விநாயகர் சிலை.. சந்தன மரத்தில் கைவண்ணம்கணபதி பாப்பா மோரியா.. 11 அங்குல உயரத்தில் கியூட்டான நர்த்தன விநாயகர் சிலை.. சந்தன மரத்தில் கைவண்ணம்

    English summary
    PMK leader ramadoss welcome Chief Minister Shivraj Singh Chauhan's announcement that “All government jobs in Madhya Pradesh are for the people of this state". he have demand Tamil Nadu government should come forward by issuing a similar law in Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X