சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈவிஎம் மீது குவியும் புகார்.. எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை கூட்டம்.. சுப்ரீம் கோர்ட் செல்ல முடிவு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து இன்று டெல்லியில் பெரிய ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து இன்று டெல்லியில் பெரிய ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாட்டிற்கு எதிராக இவர்கள் எல்லோரும் தற்போது உச்ச நீதிமன்றம் செல்ல முடிவெடுத்து இருக்கிறார்கள்.

லோக்சபா தேர்தல் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட வாக்கு பதிவு வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.

ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

 தொடரும் சோதனை.. குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர்கள் வீடுகளிலும் ஐடி ரெய்டு! தொடரும் சோதனை.. குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர்கள் வீடுகளிலும் ஐடி ரெய்டு!

ஆந்திரா எப்படி

ஆந்திரா எப்படி

இந்த நிலையில் ஆந்திராவில் குண்டூர், அனந்தப்பூர், விசாகப்பட்டினம், கோதாவரியில் தேர்தலின் போது வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. மொத்தம் 89,000 வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்தது.

லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

கடிதம்

கடிதம்

இந்த நிலையில் ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் இவரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. மேலும் இவர் கொடுத்த பல புகார்களை தேர்தல் ஆணையம் புறந்தள்ளி இருக்கிறது.

தொடர் புகார்

தொடர் புகார்

இதையடுத்து ஆந்திரா மட்டுமில்லாமல் நாடு முழுக்க தொடர்ச்சியாக வாக்கு பதிவு எந்திரங்களுக்கு எதிராக நிறைய புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. முக்கியமாக எதிர்க்கட்சிகள் மின்னனு வாக்கு பதிவு எந்திரங்களுக்கு எதிராக புகார்களை அடுக்கி வந்தது. இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து இருக்கிறது.

இன்று கூட்டம்

இன்று கூட்டம்

டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், திமுக , பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய பல கட்சிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு இருக்கிறது. ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இதை முன்னின்று நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

என்ன முடிவு

என்ன முடிவு

இதில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாட்டிற்கு எதிராக இவர்கள் எல்லோரும் தற்போது உச்ச நீதிமன்றம் செல்ல முடிவெடுத்து இருக்கிறார்கள். அதேபோல் தற்போது நடக்கும் தேர்தலில் 50% வாக்கு சீட்டு பதிவு முறையை பயன்படுத்தி வாக்கு பதிவை சோதனை செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்து இருக்கிறார்கள். இது தொடர்பாக இவர்கள் விரைவில் வழக்கு தொடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lok Sabha Election 2019: All opposition parties are meeting today in Delhi to discuss on EVM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X