சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தல் முடிந்தது.. எக்சிட் போல் முடிவுக்காக.. ஆர்வத்துடன் காத்திருக்கும் மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் மக்களிடையே எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும், தமிழகத்தில் 22 தொகுதிகளில் வெல்லப்போவது யார் என்பது அறியவும், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து வந்தது. கடைசி கட்ட தேர்தல் (மே 19ம் தேதி) இன்றுடன் முடிந்தது.

 all peoples wait for lok sabha exit poll results 2019

தேர்தல் முடிவுகள் வரும் மே 23ம் தேதி வெளியாகிறது. இதனிடையே காங்கிரஸ்- பாஜக-:மாநில கட்சிகள் இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்பது குறித்து ஆர்வம் மக்களிடையே அதிகமாக இருக்கிறது.

இந்த நாட்டை ஆளப்போகும் தலைவர் யார் என்பதை அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும் மக்கள், இன்று மாலை 6.30மணிக்கு மேல் பல்வேறு தொலைக்காட்சிகள் வெளியிட உள்ள கருத்துக்கணிப்புகளின் மீது எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பெரும்பாலும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் ஒரளவு சரியாக இருக்கும் என்பதே இதற்கு காரணம். அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் தேர்தல் முடிந்த பின்னர் வெளியாக உள்ள கருத்துக்கணிப்புகள் குறித்து எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 லோக்சபா தேர்தல்.. மகுடம் சூடி ஆட்சியை பிடிப்பது யார்? சற்று நேரத்தில் வெளியாகிறது எக்ஸிட் போல்! லோக்சபா தேர்தல்.. மகுடம் சூடி ஆட்சியை பிடிப்பது யார்? சற்று நேரத்தில் வெளியாகிறது எக்ஸிட் போல்!

தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்திருப்பதால் தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்த கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் மற்றும் மாநில ஊடகங்கள் வெளியிட உள்ளன. மாலை 6.30மணி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்து இருப்பதால், சரியாக 6.30 மணிக்கு மேல் வரிசையாக என்டிடிவி, டைம்ஸ் நவ் என ஒவ்வொரு சேனல்களும் கருத்துக்கணிப்புகளை வெளியிட உள்ளன.

English summary
tn peoples wait for lok sabha exit poll results 2019 and 22 asembly by elections exit poll results
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X