சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற வாயில்கள் மூடப்படுகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: இன்றிரவு(சனிக்கிழமை) 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற வாயில்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாரும் உயர்நீதிமன்றத்தை உரிமை கொண்டாட கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் நுழைவு வாயில்கள் மூடப்படுவது வழக்கமாகும்.

150 ஆண்டுகள் பழமையானது சென்னை உயர்நீதிமன்ற கட்டிடம். இந்த கட்டிடத்தின் நுழைவு வாயில்களை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

all the gates of chennai high court, closed next 24 hours from 8 pm

இந்த உயர்நீதிமன்ற வாயில்கள் அந்த பகுதி பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இருக்கின்றது. இந்த வாயில்களை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துவது சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்படும்,

அதன்படி, உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் நவம்பர் 9-ம் தேதியான இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

English summary
madras High Court to close all its gates for 24 hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X