சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா கெடுபிடி தளர்வு: ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்- சென்னை ஹைகோர்ட்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்த நிலையில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், காணொளி காட்சி மூலம், புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன.

All the judges will hear plea from July 6 in Chennai High Court

இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகள், பொது நல வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்தன. அதேபோல நான்கு தனி நீதிபதிகள், ஜாமீன், முன் ஜாமீன், பொது வழக்குகளையும் விசாரித்து வந்தனர்.

இடையில், நீதிமன்ற விசாரணையை துவங்கிய போது, நீதிபதிகளுக்கும், ஊழியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்து, மீண்டும் காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை துவங்கியது.நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்தும், வழக்கறிஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும், சில நேரங்களில் சில வழக்கறிஞர்கள், தங்கள் வாகனங்களில் இருந்தும் விசாரணையில் ஆஜராகி வந்தனர்.

இந்த காணொளி காட்சி விசாரணையின் போது, இடையூறுகள், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, திறமையாக தங்கள் வாதங்களை முன் வைக்க முடியவில்லை என வழக்கறிஞர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நீதிமன்றங்களை திறந்து, நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவு போபோஸ்.. சூப்பராக படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவு போபோஸ்.. சூப்பராக படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து, அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டி, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவை வழக்குகளையும் விசாரிப்பது எனவும், காணொளி காட்சி மூலம் மட்டும் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இரு நீதிபதிகளும், அடங்கிய ஆறு அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை ஆறு முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.இதேபோல மதுரைக் கிளையில், இரு நீதிபதிகள் அமர்வு இரண்டும், 9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 6 முதல் புதிய வழக்குகள், பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
The High court of Chennai has announced that all the judges will be investigating the new and pending cases with video conference from July 6, while the 8 judges in the high court during the curfew have only investigated the emergency cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X