சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மொத்தமாக டெலிட் செய்யப்பட்ட வீடியோக்கள்.. கறுப்பர் கூட்டத்திற்கு விரைவில் தடை.. போலீஸ் ஆக்சன்!

Google Oneindia Tamil News

சென்னை: கறுப்பர் கூட்டம் சேனலில் இருக்கும் அனைத்து யூ டியூப் வீடியோக்களும் மொத்தமாக யூ டியூப் நிறுவனம் மூலம் நீக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Kantha Sasti Kavasam | மொத்தமாக Delete செய்யப்பட்ட Karuppar Koottam Videos | Oneindia Tamil

    பக்தி பாடலான கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது புகார் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் பலரும் கடுமையாக குரல் கொடுத்தனர்.

    பாஜகவினர், இந்து அமைப்பினர், பொது மக்கள், முருக பக்தர்கள் என்று பலரும் இந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். திமுகவும் இதை கண்டித்து இருந்தது. இதனால் அந்த சேனல் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரனை விரட்டும் பாஜக.. நீதிமன்றத்திற்கு வெளியே பரபரப்பு.. பாய்ந்த வழக்கு 'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரனை விரட்டும் பாஜக.. நீதிமன்றத்திற்கு வெளியே பரபரப்பு.. பாய்ந்த வழக்கு

    கைது செய்யப்பட்டனர்

    கைது செய்யப்பட்டனர்

    இந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிறுவனர் செந்தில் பாஸ்கர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து தொகுப்பாளர் சுரேந்திரன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூலம் இவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மொத்தம் 4 பேர் இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    நீக்கப்பட்டது

    நீக்கப்பட்டது

    அதை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் குறித்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம் செய்யப்பட்டது. அதேபோல் தி நகரில் இருக்கும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகம் மூடப்பட்டது. அங்கிருக்கும் ஆவணங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தற்போது மிக தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் பேக் அப் வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டெலிட் செய்யப்பட்டது

    டெலிட் செய்யப்பட்டது

    இந்த நிலையில் தற்போது மொத்தமாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. ஒரு வீடியோ விடாமல் அனைத்து வீடியோவும் நீக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக யு டியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். இதை தொடர்ந்து இந்த வீடியோக்களை யு டியூப் நிறுவனம் நீக்கி உள்ளது.

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    அடுத்து மொத்தமாக இந்த சேனலை நீக்க பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூ டியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இன்று இரவுக்குள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மொத்தமாக முடக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    All the videos in the Karuppar Koottam channel have been deleted today after the Cyber Crime complaint.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X