சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடிப் போன கூட்டணி கட்சிகள்.. அதிர வைத்த அதிமுக.. தேர்தலுக்கு முன் மேலும் பல அதிரடிகள் வெயிட்டிங்?

மறைமுக தேர்தல் அறிவிப்பால் கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆடிப் போன கூட்டணி கட்சிகள்.. அதிர வைத்த அதிமுக

    சென்னை: மறைமுக தேர்தல் என்று எடப்பாடி அரசு போட்ட அவசர சட்டத்தினால் கூட்டணி கட்சிகளோ ஆடிப்போய் உள்ளனவாம்.. அதனால் அதிமுக கூட்டணிக்குள் ஏகப்பட்ட அதிருப்திகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இன்னும் ஒன்றரை மாசத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்ற நிலையில், அதிமுக, திமுக தீவிரமாகி வருகின்றன,

    தமிழகத்தில் உள்ளாட்சி, நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த முறைப்படி தேர்வு செய்தால், மேயர், பெரும்பான்மை கவுன்சிலர்கள் எல்லோருமே ஒரே கட்சியாக இருந்து சாதகமான முடிவு ஏற்படும் என்பதால், இந்த முடிவை அதிமுக எடுத்துள்ளதாக காரணம் சொல்லப்படுகிறது.

    பதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு பதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

    மாநகராட்சி

    மாநகராட்சி

    ஆனால், இந்த புதிய சட்டம் கூட்டணி கட்சிளுக்கு அதிருப்தியை தந்துள்ளதாம். பொதுவாக, எப்போது உள்ளாட்சி தேர்தல் என்றாலும், ஆளும் தரப்புதான் பெரும்பாலான இடங்களில் போட்டியிடுவார்கள். கூட்டணிகளுக்கு பெயரளவுக்குதான் சீட் ஒதுக்கப்படும்... அதுபோலவே இந்த முறையும் மிக மிக முக்கிய மாநகராட்சியை தன் கையில் வைத்துகொள்ள அதிமுக யோசித்து வருவதாக தெரிகிறது.

    பாஜக

    பாஜக

    குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை என இந்த 6 முக்கிய மாநகராட்சிக்கு ஏகப்பட்ட போட்டி நடந்து வருகிறது. இதில், திருப்பூர், திருச்சி , திண்டுக்கல் ஆகிய 3 மேயர் பதவிக்கான இடங்களை தேமுதிக கேட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் இந்த மூன்று சீட்டையும் பாஜக கேட்டு வருகிறது.

    பாமக

    பாமக

    இப்போது உச்சக்கட்ட அப்செட்டில் இருப்பது பாமகதானாம்.. தங்களுக்கு சாதகமான மேயர் தொகுதிகள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கலக்கத்தில் இருந்தநிலையில்தான், மறைமுக தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. அதனால், முதல்வருக்கே போனை போட்டு, "ஏன் இப்படி பண்றீங்க? இது நியாயமா?" என்றே கேட்டுள்ளார். ஆனால், மறைமுக தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து பாஜகவும் கடுப்பில் உள்ளதாம்.

    யதார்த்தம்

    யதார்த்தம்

    ஆக.. மறைமுக தேர்தல் சம்பந்தமான அறிவிப்பினை யாருமே பெரிய அளவில் ரசிக்கவில்லை என தெரிகிறது. அதற்காக திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் எந்த தேர்தலையும் சந்திக்க முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளதால், பாஜகவின் பார்வை திமுக பக்கமும் திரும்பி உள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

    சாதக முடிவு?

    சாதக முடிவு?

    மறைமுக தேர்தல் என்ற புதிய அறிவிப்பினை அதிமுக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளுமா, அல்லது கூட்டணி கட்சிகள் தங்களிடம் பிரிந்து சென்று விடாமல் தடுத்து நிறுத்தி தங்கள் வசமே காப்பாற்றி கொள்ளுமா அல்லது கூட்டணிகளை மாற்றுக் கட்சியை நாட வைத்துவிடுமா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும்,

    English summary
    The aiadmk coalition parties are said to be dissatisfied with the indirect election of mayors announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X