சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக ஜெயித்தால்.. "தலை" ஒன்னுதான்.. ஆனால் 5 "வாலு" இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி!

திமுகவில் துணை முதல்வர்கள் பதவிக்கு பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சி அமைத்தால், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க ஒரு யோசனை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அந்த 5 துணை முதல்வர்கள் பதவிகளில், இரண்டையாவது கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் துணை முதல்வர்கள் பற்றின செய்தி ஒன்று அடிபட்டது... அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்றால், வன்னியர், கவுண்டர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, தலா ஒரு துணை முதல்வர் பதவி என்று 4 பேரை நியமிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதாம். அதற்கு ஓபிஎஸ்சும் பச்சைக்கொடி காட்டியதாகவும் சொல்லப்பட்டது.

இது அப்படியே ஜெகன்மோகன் ரெட்டி பாணி என்பதால், நிச்சயம் ஆந்திராவை போலவே இங்கும் பலன் தரும் என்பதாலேயே இந்த டாக் ஓடியது. அதிமுகவில் அந்த பேச்சு எந்த அளவுக்கு சென்றது என்பது தெரியவில்லை.. ஆனால், திமுகவில் இன்னமும் இதை பற்றின பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்ணாமலை அதுக்கும் தயங்க மாட்டார்.. ஆதாயத்துக்காக அரசியலுக்கு வந்தவர்.. போட்டு தாக்கும் திமுகவினர்!அண்ணாமலை அதுக்கும் தயங்க மாட்டார்.. ஆதாயத்துக்காக அரசியலுக்கு வந்தவர்.. போட்டு தாக்கும் திமுகவினர்!

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

அநேகமாக இந்த முறை அதிமுகவைவிட திமுககூட்டணியில்தான் நிறைய அதிருப்திகள் வெளிப்படலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதை பற்றி நம்மிடம் அவர்கள் சொல்லும்போது, " திமுக கூட்டணியில் சின்னம் பிரச்சனை உள்ளது.. எல்லா கட்சிகளுமே இந்த முறை சீட்களை நிறைய கேட்க இருக்கிறார்கள்.. அதிலும் விரும்பிய தொகுதிகளுக்காக இப்போதே பேச்சு அடிபடுகிறது.

துணை முதல்வர்

துணை முதல்வர்

இதைதவிர, பாமகவை உள்ளே கொண்டு வருவதை பெரிதாக யாரும் விரும்பவில்லை.. முக்கியமாக விசிக எந்த முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை.. இதெல்லாம் சேர்ந்துதான், தலைமை மீது நிறைய சந்தேகங்கள் கூட்டணிக்கு எழுந்துள்ளன.. இந்த துணை முதல்வர் விவகாரத்தை முதலில் காங்கிஸ் கட்சி தான் கிளப்பியது.. திமுக ஆட்சி அமைத்தால் தங்களுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டுமென்று காங்கிரஸ் தன்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

தொண்டர்கள்

தொண்டர்கள்

ஆனால், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டு அப்படி எதுவுமே தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று தெளிவுபடுத்திட்டார்.. இருந்தாலும் இந்த விவகாரத்தை யாருமே முற்றிலும் தவிர்க்கவில்லை என்பதே உண்மை.. இருந்தாலும் துணை முதல்வர் பதவி கேட்பதற்கு ஒரு ஆசை வேண்டாமா? தொண்டர்களே இல்லாத ஒரு கட்சிக்கு எவ்வளவு பெரிய ஆசை? போன முறை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்திருந்த இடங்களில் திமுகவே நின்றிருந்தால், இந்நேரம் ஆட்சியில் இருந்திருக்கும்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைத்தால், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கவும் ஒரு யோசனை இருக்கிறது.. அந்த 5 துணை முதல்வர்கள் பதவிகளில், இரண்டையாவது கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் முயற்சி செய்து வருகின்றன போல தெரிகிறது.

கூட்டணி

கூட்டணி

இப்போதைக்கு கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று திமுக தலைமை கருதுவதால், இந்த துணை முதல்வர்கள் பதவிகளை தீவிரமாக பரிசீலித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.. இன்னும் டைம் இருக்கு... அதனால் திமுக யாரையும் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை உடனே எடுத்துவிடாது" என்று சொல்லி முடித்து கொண்டனர்.

English summary
Alliance parties are said to be in talks with DMK for the post of Dy CM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X