சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக கூட்டணி எப்ப முடிவாச்சோ.. அப்ப இருந்தே நேரம் சரியில்லை.. கவலையில் கட்சியினர்!

அதிமுக கூட்டணியில் சகுனம் காரணமாக தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: எந்த நேரத்தில் அதிமுக கூட்டணி முடிவானதோ அப்போதிருந்தே நேரமே சரியில்லையே என்று அதிமுக தரப்பில் கவலை தோய்ந்த குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது.

அதிமுக பாமக, பாஜகவுடனான கூட்டணி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தஅறிவிப்பினை நல்ல நாள் பார்த்துதான் தலைவர்கள் அறிவித்தார்கள்.

ஆனாலும் இடைஞ்சல்கள், தடங்கள் என 22-ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் விருந்துக்கு போய் வந்ததில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே வருகிறது.

தூத்துக்குடி சென்ற முதல்வர் பழனிச்சாமி விமானத்தில் திடீர் கோளாறு.. பாதியில் சென்னை திரும்பினார்! தூத்துக்குடி சென்ற முதல்வர் பழனிச்சாமி விமானத்தில் திடீர் கோளாறு.. பாதியில் சென்னை திரும்பினார்!

விபத்து

விபத்து

விருந்துக்கு மறுநாள் பொழுது விடியும் முன்பே விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியானார். அதற்கு அடுத்தநாள் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்பி காமராஜ் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார்.

கூட்டணி இழுபறி

கூட்டணி இழுபறி

பிறகு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்ற கார் கரூர் அருகே விபத்தில் சிக்கியது. 10 நாட்களுக்கு மேலாகியும் தேமுதிக, தமாகா, கூட்டணி விவகாரம் இன்னும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

தரை இறக்கப்பட்டது

தரை இறக்கப்பட்டது

இந்நிலையில், இன்று காலை முதல்வர் தூத்துக்குடி புறப்பட்டு சென்ற விமானம் 10 நிமிஷடத்திலேயே கோளாறு காரணமாக தரை இறக்கப்பட்டுவிட்டது. இப்படி தொடர்ந்து ஏதாவது ஒன்று அதிமுக தரப்பில் நடந்து கொண்டே இருக்கிறது.

புலம்பும் அதிமுகவினர்

புலம்பும் அதிமுகவினர்

இது அதிமுகவினருக்கு லேசான கிலியை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி தொடர்ச்சியான இடைஞ்சல்கள் வருவது பாமகவுடன் கூட்டணி வைத்ததாலா? அல்லது ஜெயலலிதாவின் விருப்பத்தை மீறி பாஜகவுடன் கூட்டணி வைத்ததாலா? என தெரியவில்லையே என அதிமுகவினர் புலம்ப ஆரம்பித்துள்ளார்களாம்.

English summary
Sentimental issue has begun to arise among the AIDMK Alliance Parites
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X