சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோபிகான்னு அழைத்தால்.. அந்த மாணவியை அடையாமல் விடமாட்டார் சிவசங்கர் பாபா.. முன்னாள் மாணவி பகீர்

Google Oneindia Tamil News

சென்னை: சிவசங்கர் பாபாவுடன் டேட்டிங் செல்ல விருப்பப்பட்டால் அதற்கென ஒரு தனி செஷனே இருக்கிறது என முன்னாள் மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    Sivasankara Baba-வை CBCID கைது செய்தது எப்படி ? பரபரப்பு பின்னணி

    இதுகுறித்து கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் முன்னாள் மாணவி கூறுகையில் சிவசங்கர் பாபாவை கிருஷ்ணராக பக்தர்கள் பாவிக்கிறார்கள். மாணவிகள் அனைவரும் கோபிகாக்கள். இதில் கோபிகா என அவர் வாயை திறந்து கூப்பிட்டு விட்டால் அந்த மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்யாமல் விடமாட்டார்.

    8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

    இதில் யாரை அவர் அழைப்பார் என்றால், பொதுவாக சிவசங்கர் பாபா குறிவைப்பது சிங்கிள் மதரின் குழந்தையாக இருப்பார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகள், பயந்த சுபாவம் கொண்ட மாணவிகள் ஆகியோரைத்தான்.

    மாணவிகள்

    மாணவிகள்

    சிவசங்கர் பாபா எப்போதும் மாணவிகளிடம் கூறுவது நான்தான் உனது தந்தை, நான்தான் உனது பாய் பிரண்ட், நான்தான் உனது கணவர், நான்தான் உனக்கு எல்லாமே என கூறுவார். பாபாவுடன் டேட்டிங் செல்ல விரும்பினால் அதற்கென ஒரு செஷனே இருக்கிறது.

    பரிசுகள்

    பரிசுகள்

    பாபா தனது லாஞ்சிற்கு அழைத்து செல்வார். அங்கு அந்த இடமே கலர்புல்லாக இருக்கும். அதாவது குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இருக்கும். நிறைய சாக்லேட்டுகளை கொடுப்பாராம். நிறைய கிப்ட்களையும் கொடுப்பாராம். மாணவிகளின் பிறந்தநாள் என்றால் விலையுயர்ந்த பரிசுகள், ஆடைகளை கொடுப்பார்.

    மது

    மது

    பெண் குழந்தைகளுக்கு மதுவையும் பாபா கொடுப்பார். சும்மா ஒரு சிப் குடி என கொடுப்பாராம். இதெல்லாம் நான் கண்களால் பார்க்கவில்லை, கேள்விப்பட்ட விஷயம். நான் இதையெல்லாம் மெதுவாக வெளியே பேச தொடங்கிய போது எனக்கு டிசி கொடுத்து அனுப்பினார்கள். எனக்கு குறைந்த மார்க்கை போட்டு என் பெற்றோரிடம் நான் நன்றாக படிக்கவில்லை என கூறி டிசி கொடுத்து அனுப்பினார்கள்.

    12ஆம் வகுப்பு

    12ஆம் வகுப்பு

    இதை என் பெற்றோருக்கு உணர்த்த ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு சேர்ந்து கஷ்டப்பட்டு படித்து அந்த பள்ளியின் டாப்பராக வந்து நான் என் மீது தவறில்லை என்பதை நிரூபித்தேன். பாபாவை தவிர வேறு யாரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் மாணவிகளை பாபாவிடம் அழைத்து செல்வதே ஆசிரியைகள்தான்.

    பெண்

    பெண்

    முதலில் ஒரு மாணவியை 3 முறை பாபாவிடம் அழைத்து செல்வார்கள். பின்னர் 4ஆவது முறை அந்த மாணவி தனியாக செல்ல சொல்வார்கள். இன்னொரு மாணவி ஒருவர் பாபாவிடம் போய் தனது தனிப்பட்ட பிரச்சினைகளை கூற சென்றார். அப்போது பாபா, நீ கவலைப்படாதே, உனக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு, நான் உன் கிட்ட வரேன் என சொல்லி அந்த மாணவியின் மடியில் படுத்துக் கொண்டு முத்தமிட்டுள்ளார். அந்த பெண் உடனே எழுந்து வந்துவிட்டார்.

    நல்லதுதான்

    நல்லதுதான்

    அது போல் அந்த பள்ளி வளாகத்தில் வசிக்கும் பக்தர்களின் மகள்களையும் குறைகளை சொல்ல பாபாவிடம் பெற்றோரே அனுப்புவார்கள். அவர் எப்படிப்பட்டவர் என தெரிந்தும் அனுப்புவார், அவர்களை பொருத்தமட்டில் பாபா கடவுள், அவர் எது செய்தாலும் நல்லதுக்குத்தான் என நினைத்து அனுப்புவார்கள் என அந்த மாணவி தெரிவித்தார்.

    English summary
    Alumi of Sushil Hari International school says about Shivsankar Baba.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X