• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

இன்னைக்கு ஃபுல் மீல்ஸ் தான்.. கே.பி.அன்பழகன் வீட்டின் முன்பு குவிந்த.. தொண்டர்களுக்கு உணவு விநியோகம்

Google Oneindia Tamil News

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுகவினர் அங்குக் குவிந்து வருகின்றனர். விரைவில் சில முன்னாள் அதிமுக அமைச்சர்களும் அங்கு செல்லலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்திலேயே அமைச்சர்கள் ஊழலில் திளைத்துள்ளதாக திமுக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, தேர்தல் சமயத்திலும் கூட திமுக தலைவர்கள் இதைத்தான் முக்கியமாக வலியுறுத்தினர்.

மேலும், திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து ஊழல் அமைச்சர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்ததால் அப்போது இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

துண்டு துண்டுகளாக சிதறிய தீவுகள்.. எரிமலை வெடிப்பால் சின்னாபின்னமான டோங்கோ..புதிய சாட்டிலைட் படங்கள்துண்டு துண்டுகளாக சிதறிய தீவுகள்.. எரிமலை வெடிப்பால் சின்னாபின்னமான டோங்கோ..புதிய சாட்டிலைட் படங்கள்

 முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்கள்

ஆனால், அதன் பிறகும் பல்வேறு முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்தும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்படி முதலில் சிக்கியது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி, சி விஜயபாஸ்கர், பி. தங்கமணி எனப் பலரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்,

 கே.பி.அன்பழகன்

கே.பி.அன்பழகன்

இந்த வரிசையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வரிசையில் 6ஆவதாக இன்று அதிகாலை முதலே முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துகின்றார். மொத்தம் 57 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, சென்னை, தெலங்கானா மொத்தம் 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 குவியும் தொண்டர்கள்

குவியும் தொண்டர்கள்

வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ 11 கோடி சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்குபிதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மனைவி, 2 மகன்கள் மற்றும் மருகமள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் கே.பி.அன்பழகன் தனது சொந்த ஊரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கே.பி.அன்பழகன் வீடுகளில் சோதனை நடைபெறுவதை அறிந்த அதிமுகவினர் அங்குக் குவிந்து வருகின்றனர். விரைவில் சில முன்னாள் அதிமுக அமைச்சர்களும் அங்குச் செல்லலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 எஸ்பி வேலுமணி

எஸ்பி வேலுமணி

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கோவையில் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர். அப்போது வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க முதலில் ரோஸ் மில்க், மோர் போன்ற குளிர்ச்சியான பானங்கள் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் மதிய வேளையில் உணவும் கூட வழங்கப்பட்டது.

 உணவு விநியோகம்

உணவு விநியோகம்

இந்நிலையில், தற்போது கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் சூழலில் அதிமுகவினர் அங்குக் குவிந்து வருகின்றனர். சோதனை ஒருபுறம் நடைபெறும் நிலையில், மறுபுறம் அங்குக் குவிந்த அதிமுக தொண்டர்களுக்கு உணவு விநியோகமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு வரும் அதிமுக தொண்டர்களுக்குச் சாதம், சாம்பார், ரசம் என முழு மதிய உணவு வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் அதிகரித்தால் அதற்கேற்ப உணவுகளைத் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

  பொங்கல் பரிசு தொகுப்பு குளறுபடியை மறைக்க அன்பழகன் வீட்டில் ரெய்டு - எடப்பாடி பழனிசாமி
   சோதனை ஏன்

  சோதனை ஏன்

  முன்னதாக தர்மபுரி மாவட்ட மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  English summary
  DVAC raid in ex minister KP Anbalagan residence. Food are being distributed in house of KP Anbalagan.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X