சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் நம்பர் 1.. கல்வியில் பல வல்லரசு நாடுகளை முந்திய தமிழகம்.. GER விகிதத்தில் முதலிடம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை சதவிகிதம் எனப்படும் Gross enrollment ratioல் தமிழகம்தான் முதலீடும் வகிக்கிறது. பல உலக நாடுகளை விட தமிழகம் இதில் முன்னோடியாக திகழ்கிறது.

Recommended Video

    RSS திட்டங்கள் ! பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை..

    பெரும் எதிர்ப்பிற்கும் விவாதத்திற்கும் இடையில் தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வெளியிட்டது.

    மும்மொழிக்கொள்கை தொடங்கி எம்பில் படிப்புகள் நீக்கம் வரை முக்கியமான நடைமுறைகள், அறிவிப்புகள் இதில் வெளியாகி உள்ளது.இதன் மூலம் கல்வித்துறையில் நிறைய சீர்திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பிளஸ் 2 மாணவர்களே! Neet வேண்டாம்.. இதை படித்தால் நீங்களும் டாக்டர்தான்! சொல்கிறார் டாக்டர் தீபாபிளஸ் 2 மாணவர்களே! Neet வேண்டாம்.. இதை படித்தால் நீங்களும் டாக்டர்தான்! சொல்கிறார் டாக்டர் தீபா

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வர நிறைய காரணங்களை சொல்கிறது. அதில் முக்கியமான ஒரு காரணம், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது. 2035க்குள் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை 50% ஆக உயர்த்துவது என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கை சதவிகிதம் எனப்படும் Gross enrollment ratioல் 50% எட்டுவதுதான் மத்திய அரசின் புதிய இலக்காக இருக்கிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த இலக்கை தமிழகம் எப்போதோ அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பேர் கல்லூரி சேர்க்கிறார்கள். பள்ளி படிப்பை முடிப்பவர்களில் மொத்தம் 49% பேர் தமிழகத்தில் கல்லூரியில் சேர்க்கிறார்கள். அதாவது மத்திய அரசு 2035க்கு வைத்த இலக்கை நாம் 2019லேயே தொட்டுவிட்டோம். மற்ற மாநிலங்கள் எல்லாம் இதில் அதள பாதாளத்தில் இருக்கிறது.

    மற்ற மாநிலங்கள்

    மற்ற மாநிலங்கள்

    மற்ற மாநிலங்களின் நிலை என்று பார்த்தால் கல்வியில் முன்னிலை வகிக்கும் கேரளாவில் ஜிஇஆர் 37% ஆக உள்ளது. அது போக டெல்லியில் அதிகமாக ஜிஇஆர் 46.3% ஆக இருக்கிறது. தெலுங்கானாவில் இது 36.2% ஆக இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இது 32.4% ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஜிஇஆர் சதவிகிதம் 32 ஆக உள்ளது. கர்நாடகாவில் இது வெறும் 28%தான்.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    இந்தியாவின் மொத்த ஜிஇஆர் சதவிகிதம் 28%தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை தமிழகம் முந்தியது மட்டுமின்றி பல வல்லரசு நாடுகளையும் தமிழகம் இதில் முந்தி இருக்கிறது.

    • சீனாவின் ஜிஇஆர் சதவிகிதம் 43% ஆனால் தமிழகத்தின் சதவிகிதம் 49.
    • மலேசியாவின் ஜிஇஆர் சதவிகிதம் 45%.
    • பஹ்ரைனின் ஜிஇஆர் சதவிகிதம் 47%.
    • இப்படி வளர்ந்த நாடுகளை விட தமிழகம் முன்னோடியாக உள்ளது.

    அதிகமாகும் சதவிகிதம்

    அதிகமாகும் சதவிகிதம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எல்லா வருடமும் இந்த சதவிகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது . அதாவது தமிழகத்தில் ஜிஇஆர் சதவிகிதம் அதிகரிப்புதான் மற்ற மாநிலங்களில் அதிகரிக்கும் சதவிகிதத்தை கூடுதல் ஆகும். போக தமிழகம் இதில் விரைவில் 50% என்ற இலக்கை தாண்டும் என்று கூறுகிறார்கள் . பிற மாநிலங்கள் இந்த இலக்கை தொட குறைந்தது 10 வருடங்கள் ஆகும்.

    பெண்கள் கல்வி

    பெண்கள் கல்வி

    அதோடு கல்வி சேர்க்கையில் பாலின வேறுப்பாட்டையும் தமிழகம் கடந்து உள்ளது.உயர் கல்வி சேர்க்கையில் ஆண்களின் சதவிகிதம் 49.8 ஆக உள்ளது. பெண்களின் சதவிகிதம் 48.3 ஆக உள்ளது. எந்த மாநிலமும், ஏன் கேரளாவும் கூட இந்த இலக்கை , சாதனையை அடைய முடியவில்லை. தமிழகம் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம், இந்த புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது.

    English summary
    Amid New Educational Policy, Tamilnadu tops in Gross Enrollment Ratio in India than other states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X