சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சண்டை போட்டது போதும்.. டெல்லியில் எதிரொலித்த அதிமுக உட்கட்சி பூசல்.. கறாராக எச்சரித்த அமித் ஷா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah advised ADMK | டெல்லியில் எதிரொலித்த அதிமுக உட்கட்சி பூசல்.. அமித் ஷா நடவடிக்கை

    சென்னை: அதிமுக கட்சிக்குள் நிலவி வரும் உட்கட்சி பூசல் தற்போது டெல்லி பாஜக தலைமை வரை சென்று இருக்கிறது.

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக திறப்பு விழாதான் தற்போது அதிமுக கட்சிக்குள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனியாக சந்தித்துக் கொண்டனர்.

    இந்த சந்திப்பின் போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சந்திப்பிற்கு பின் அமித் ஷா கட்சி சாராத முக்கிய அரசியல் ஆலோசகர் ஒருவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    தமிழகத்தை சேர்ந்தவரும் டெல்லியில் முக்கிய பொறுப்பில் இருப்பவருமான அரசியல் ஆலோசகர் ஒருவரிடம் அமித் ஷா சில நிமிடங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசி உள்ளார். அப்போது அதிமுக கட்சிக்குள் நிலவும் உட்கட்சி புகார்கள் குறித்து ஆலோசித்து இருக்கின்றனர். கட்சிக்குள் என்ன பிரச்சனை என்று ஆலோசித்துள்ளனர்.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கும் தற்போது நல்ல இணக்கம் இல்லை. இருவருக்கும் இடையில் கொஞ்சம் பிரச்சனை நிலவி வருகிறது. அது திமுகவிற்கு சாதகமாக முடியும். அவர்கள் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அமித் ஷாவிடம் அந்த அரசியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

    மிக மோசம்

    மிக மோசம்

    முதல்வருடன் அமித் ஷா நடத்திய சந்திப்பிலும் இதே விஷயம் பேசப்பட்டு உள்ளது. முதல்வரும் கட்சிக்குள் கொஞ்சம் சிக்கல் நிலவுகிறது. உறுப்பினர்கள் இரண்டாக பிரிந்து வேலை செய்கிறார்கள். இதை சரிக்கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    என்ன கேள்வி

    என்ன கேள்வி

    முக்கியமாக அதிமுக கட்சிக்குள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்படுகிறாரா என்றும் விவாதத்தில் அமித் ஷா கேட்டு இருக்கிறார். அவருக்கு எதிராக யார் செயல்படுகிறார் என்று கேட்டுள்ளனர். இந்த சந்திப்பு எல்லாம் முடிந்து, அமித் ஷா டெல்லி சென்ற பின்பும் கூட அதிமுகவில் பெரிய அளவில் சமாதானம் திரும்பவில்லை.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த விஷயம் அமித் ஷாவிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தொடர்ந்து நிலவும் உட்கட்சி பூசலால் கோபம் அடைந்த அமித் ஷா, அதிமுக நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ளார். கட்சியில் இப்படியே சண்டை போட்டுகொண்டு இருக்க வேண்டாம். போதும். உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் ஆகுங்கள் என்று அழுத்தமாக கூறியுள்ளார். இதனால் அதிமுக கட்சியில் விரைவில் சில மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Amit Shah advised AIADMK to resolve all inner-party issues as soon as possible.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X